பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

91

மாற்றாத கட்டொழுங்கு உடைமையே தகைதல் எனப்படும். “விைைல தகைந்து மாறிவிட்டான் அவன், மனிதப் பிறப்புத் தானா?" என்பர். தகைமையை (பண்பை)க் காட்டுவது தகைதல் ஆயிற்றாம். அதனைத் திகைதல் எனவும் வழங்குவர்.

தட்டிக் கழித்தல் சொல்லியதைக் கேளாமல்

ஒதுங்குதல் (மழுப்புதல்)

ஒரு

ன்றைச் சொன்னால் அதற்குத்தக்கவாறான மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு “என்ன, தட்டிக் கழிக்கி றாயா?” என்பது வழக்கு, "தட்டிக் கழிப்பதில் பெரிய ஆள். எதைச் சொல்லுங்களேன் அதற்கு ஒன்று அவன் வைத்திருப் பான்” என்பதும் கேட்பதே.

இங்கே தட்டுதல், கழித்தல் என்னும் சொற்களுக்கு நேர் பொருள் இல்லை. இரண்டும் சேரும்பொழுது மழுப்புதல் என்னும் பொருள் தருதல் கண்டு கொள்க.

தட்டிக் கொடுத்தல் - பாராட்டல், அடித்தல்

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத்தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ்வேளையில் தட்டிக் கொடுத்தல், தழுவிக் கொள்ளல் ஆகியவை நிகழ்த்துவர். ஆதலால் தட்டிக் கொடுத்தல் என்பதற்குப் பாராட்டுதல் என்னும் பொருள் உண்டாயிற்றாம். இனிச்சில வேளைகளில் இதற்கு எதிரிடைப் பொருளும் உண் L டாவதுண்டு. “உன்னைத் தட்டிக் கொடுத்தால்தான் ஒழுங்காக வேலைபார்ப்பாய்" என்பதில் தட்டிக் கொடுத்தல் என்பது அடித்தல் பொருளில் வருகின்றதாம். ஒரு தட்டுத் தட்டு சரி யாகும் என்பார். தட்டு = அடி

தடம் மாறல் – ஒழுங்கற்ற வழியில் நடத்தல்.

தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர் வழி அல்லது திட்டப் படுத்திய வழி. அத்தடத்தை மாறி வேறு தடத்தில் போவது என்பது முறைகேடு ஒழுங்கின்மை என்னும் பொருள் தருவதாம்.

ஓட்டப்பந்தயத்தில், கோடு போடுவதும் அவரவர் கோட்டில் ஓடவேண்டும் என்பதும் ஒழுங்குமுறை. சிலர் புறப் படுமிடம் சரியாக இருக்கும். ஓடும்போது தடம்மாறிவிடுவர். இறுதியில் உரிய தடத்திற்குப்போய் வெற்றி பெற்றுவிடுவர்.