பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

உணவு வேண்டும்

101

வேண்டும்" என்பாரா அப்படிவேண்டுமென்றாலும் வாய் விருந்தர்க்கு வேறு வழியில்லாமல் போய்விடுமா?

திரையைக் கிழித்தல் - வெளிப்படுத்துதல்

திரையாவது மறைப்பு, வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவு களும் மறைப்புகளுமாம். ஆள்களுக்கும் துணித்திரை (முகத் திரை) உண்டு. அதனைக் குறியாமல், உள்ளத்தே மறைத்துள்ள தீய செய்திகளை வெளிப்படுத்துதல் இத் திரையைக் கிழித்த லாம். பொய்யை மெய்யாக நடிப்பதையும் ஏமாற்றுவதையும் வெளிப்படுத்திக் காட்ட விரும்புவர். “எவ்வளவுதான் உன்னால் மறைக்க முடியும்? கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள்! பார் உன் திரையைக் கிழித்துக் காட்டுகிறேன்” என்று எச்சரிக்கை விடுப் பர். இவண் திரை கிழித்தல் என்பது வெளிப்படுத்துதல் பொருள தாம். முகத்திரையை விலகுதல் என்பதும் இப்பொருளதே. தினவெடுத்தல் - அடங்காது திரிதல்

“தினவெடுத்துத் திரிகிறான்” என்னும் சொல்லின் பொருட் குறிப்பு ஆழமானது. படக்கூடாதது பட்டால் தோலில் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல் தின வுக்கு (காமவெறிக்கு) ஆட்பட்டு அவ்வெறியாலேயே திரிபவன் என்னும் பொருளில் வழங்குவதாம்.

'தினவு' அரிப்பு எனவும் படும். அரிப்பெடுத்து அலை கிறான் என்பதும் இப்பொருளதே. பொறாமை, பிறர்க்கு உண் டாகும் தீமையால் மகிழ்தல் முதலியவும் இத்தினவு வகைப் பட்டதே. அடங்காத்தனம் சுட்டும் சொல்லாகத் தினவு வழக்கில் உள்ளது. ப் பொழுது எழுதும் சிறுகதை, பேசும் அரசியல் ஆகியவற்றில் தினவும் அரிப்பும் மிக இடம் பெறுகின்றன. தீயாற்றல் - குழிமெழுகுதல்

இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை நீர்விட்டு அணைத்துப் பாலூற்றல் தேன் சொரிதல் எலும்பை எடுத்து உருவமைத்து வழிபடல் ஆகியவெல்லாம் நிகழும். நீர் கொணர்ந்து நிலம் மெழுகி அறுகு நடல், பிரண்டை நடல் என்பனவும் செய்வர். இறந்தவரை எரியூட்டிய மறு நாள், அல்லது புதைத்த மறுநாள் நன் காட்டில் செய்யும்