பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம்

1

இன்று மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய் மறைவைக் கண்டெடுத்தல் தெரிப்பெடுத்தல் என வழங்குகின்றது. இனிச் ‘சாமியாடிகள்' சொல்வது கொண்டும் தெரிப்பெடுத்தல் உண்டு. தெரிவிக்கப்பட்ட அடையாளப்படி தெரிவிக்கப்பட்ட இடத்தில் தெரிவிக்கப்பட்ட பொருளை எடுத்தலே தெரிப்பெடுத்தலாக வழக்கில் உள்ளதாம். பலவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு ஏதோ ஒருவகையான் சரியாக இருப்பின் அதனைக்கொண்டே காலத்தை ஓட்டல் கண்டறியும் செய்தி. தெளியக்கடைந்தவன் - தேர்ந்தவன்

சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடி னாலும் 'தெளியக்கடைந்தவன்' என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த மோரை மீளக் கடைந்து வெண் யெடுப்பது போல்வதாம். 'கடைந்தமோரில் வெண்ணெய் எடுப்பவன்' எனவும் கூறுவர். 'தெளிவு' என்பது தெளிந்த மோர். கட்டிமோர் கீழே படிய, தெளிவானது மேலே நீராக நிற்கும். அதில் மோரின் இயல்பும் இல்லை. அவ்வாறாக அதில் வெண்ணெய் எடுப்பது அருமை ஆகலின், அதனை எடுக்கவும் வல்லவன் எனக் கூறுவதாம். இது, து, இசை வழிப்பட்டதன்று எள்ளல் வழிப்பட்டது.

தெற்று - எழும்புதல்,

தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில மட்டத்திற்கு மேலே திண்ணிதாய் அமைக்கப்பட்டதே திண்ணை என்பதாம். தெற்றுப்பல் என்றால் இயல்பான பல் வரிசையை விடுத்துமேலே எழும்பி நிற்கும் பல்லைக் குறிப்பதாம். தெற்று 'தென்' என்பதன் வழிவந்ததாம். தென், தென்னை, தென்னுதல் என்பவை வளைதல் பொருளுடையதாகி, அவை நிரம்ப வளர்ந்த திக்கிற்குப் பெயராயிற்று. தெற்கு 'தென் 'தெங்கு' என்பவை அறிக.

தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல்

காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டு விட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடை முறை. அத் தேய்த்தலுக்கும் எல்லாக் கல்லையும் பயன்படுத்த முடியாது. கேட்பாரற்றதும் கருதுவாரற்றதுமாகிய கல்லிலேயே