பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

105

தேய்ப்பர். அத்தகைய கல்லைப் கல்லைப் போலச் சிலரை இழிவு படுத்தினால், “என்னைத் தேய்த்துப் போட்ட கல்லைப்போல நினைக்கிறான்; அவனை மதித்து நானென்ன பார்ப்பது” என வறுத்துரைத்தல் வழக்கு.

தேய்த்துவிடுதல் - ஏமாற்றி இல்லையெனல்

இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலைய விட்டு அவர்களே உண்மையறிந்துகொண்டு ஒதுங்க விடுதல் தேய்த்து விடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல் போல்வ தென்க.

66

எண்ணெய் தேய்த்தல் தேய்த்து குளிப்பாட்டல் என்ப வற்றைக் கருதினால் தேய்த்து விடுதல் இன்பப்படுத்துதலும், அப்படியே குளிப்பாட்டுதல் ஏமாற்றுதலும் ஆகிய பொருள் களைத் தருவதாக அமையும். குளிப்பாட்டல்”, என்னும் வழக்கை அறிக. "பேச்சிலேயே குளிப்பாட்டி விடுவானே அவனுக்குத் தண்ணீர் எதற்கு?” என்பதும் இப்பொருளை விளக்கும்.

தேனாக ஒழுகுதல் - (வஞ்சமாக) இனிக்க இனிக்கக் கூறல்

66

“வாய் கருப்புக்கட்டி; கை கடுக்காய் “என்பதும், உள்ளத்தி லே வேம்பு உதட்டிலே கரும்பு” என்பதும் பழமொழிகள். தேன் ஒழுகுதல் போல இனிக்க இனிக்கப் பேசுதலைக் குறித் தாலும், உள்ளே வஞ்சகம் உண்மையால் பெருந்தீமை பயப்பதே

யாம்.

“உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்னும் வள்ளலார் வாக்கு தேனாக ஒழுக விடுவாரின் தேர்ச்சி நிலையைத் தெளிவிக்கும். தொட்டாற் சுருங்கி - அழுகுணி, சொல்லப் பொறாதவன்

தொட்டவுணர்வால், தானே சுருங்கும் செடி, தொட்டாற் சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒரு சொல்லைச் சொல்லப் பொறுக்காமலும், தொட்டால் தொடப்பொறுக்காமலும் அழும் குழந்தையைத் தொட்டாற் சுருங்கி என்பர். அந்நிலையில் வளர்ந்தவர்களும் இருப்பதுண்டு. விளையாட்டுக்கு ஒன்றைச் சொன்னாலும் விளை யாட்டாகக் கொள்ளாமல் சண்டைக்கு வந்து விடுவர். அப்படி அவர்கள் இயல்பு இருப்பதை அறிந்து பலரும் அதே விளை