பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

107

குடிக்கும் அவ்வாறே கஞ்சி சோறு ஆயவற்றை நாய் உண்பதும் நக்குதல் எனவே சொல்லப்படும். நக்குதல் என்பது இழிவுப் பொருள் தருவதாக அமைந்துவிட்டது. அதுபோல் உழை யாமலோ, உழைப்புக் கிட்டாமலோ இரந்து உண்பதை நக்கிக் குடித்தல் என்பது வழக்காக ஊன்றி விட்டது. நகை என்பதும் உயர் பொருளை விடுத்து இழி பொருளுக்கு இடமாகியதும் உண்டு. 'நகையாண்டி' என்பதே நையாண்டியாதல் அறிக. நட்டாற்றில் விடுதல் - ஒரு பணியின் நடுவே கை விடுதல்

நட்டாற்று (நடு ஆற்று) வரை வெள்ளத்தில் படகில் ஏற்றிக் கொண்டு போய் இடையே உன்பாடு எனத் தள்ளி விட்டால் அவன் பாடு என்னாம்? கரையிலேயே இருந்திருப் பான்; வெள்ளம் வடித்தபின் வந்திருப்பான்; நீந்திக் கடக்க முடியுமா என எதிர்நோக்கியிருப்பான். இவற்றுக்கு வாய்ப் பெதுவும் இல்லாமல் வெள்ளத்தோடு வெள்ளமாகப் போக விடுதல் வெங்கொடுமையாம். இப்படி ஓர் இடரான செயலைத் தொடங்கி அதன் இடையே உதவாமலும் எதிரிட்டும் இருத்தல் நட்டாற்றில் விடுதலாம். இது நட்டாற்றில் தள்ளல், கைவிடல் எனவும் வழங்கும்.

நடப்பு நடக்கும் செய்தி, ஆண்டு

66

"இப்பொழுது செய்ய முடியாது; நடப்புக்குப் பார்க்க லாம்" என்பது வழக்கு. நடப்பு என்பது எதிர்வரும் ஆண்டு என்பதாம். இதில் நடக்கும் ஆண்டை நடப்பு என்பது வழக் கில்லை. ஆனால், “நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது” என்பதில் நடப்பு என்பது நடைமுறை என்றும் நிகழ்ச்சி என்றும் பொருள் தருவதாய் அமைகின்றது. இதற்கு மேல், “அவன் நடப்புச் சரியில்லை" என்பதில் நடப்பு என்பதில் நடப்பு ஒழுங்குப் பொருள் தருதல் வெளிப்படை. ஆயினும் ‘நடப்பு’ ‘நடை' என்பதன் வழியாகவே வருகின்றது.

நடுச்செங்கலை உருவல் - ஒரு தீமையால் பல தீமைக்கு ஆளாக்கல்

ஒரு தளத்தின் நடுவேயுள்ள செங்கல்லை உருவினால் அதன் பக்கங்களில் உள்ள செங்கற்களும் ஒவ்வொன்றாகச் சரிந்து தளமே பாழ்பட நேரும். அவ்வாறே ஓர் அரிய செயலில் ஈடுபட்டுள்ளபோது அதற்கு அச்சாணியாக இருக்கும் ஒரு செயலைத் தடைப்படுத்தி விடுவது முழுத் தடையும் செய்த தாகவே முடியும். அன்றியும் முழுப்பயன் இழப்புடன், வீண் முயற்சியும், செலவும், மனத்துயரும் உண்டாகவே இடமாம்.