பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் 1

“நன்றாகத் தொழில் ஓடிக்கொண்டிருந்தபோது நடுச் செங்கலை உருவுவது போல உருவி விட்டாளே” என்பது வழக்குரை. நருள் - மக்கள், கூட்டம்

நரலுதல் என்பது ஒலித்தல். மக்கள் கூட்டமாகக் கூடிய இடத்தில் ஒலி மிக்கிருத்தல் வெளிப்படை. ஆதலால் ஒலித்தல் பொருள் தரும் 'நரல்' அவ் வொலிக்கு அடிப்படையாக அமைந்த கூட்டத்தை ‘நரல்' எனக் குறித்து, ‘நருள்' என்றா கியது. 'நருள் பெருத்துப் போனது' என்பதில், மக்கள் பெருகி விட்டனர் என்னும் குறிப்புளது. “இவ்வளவு பதவலா?” என்பதும் மக்களின் கூட்டம் என்னும் பொருளே தருதலும் வழக்கே. பதவல் பார்க்க.

நாக்கோணல் - சொல் மாறல்

நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது.

“கோடானு கோடி, கொடுப்பினும் தன்னுடைநாக் கோணாமை கோடியுறும்” என்னும் ஒளவையார் தனிப்பாடல் க்கோணாமை என்ன என்பதையும் அதனைப் போற்றுதலின் அருமையையும் தெளிவிக்கும்.

நா

என்பன

நாக்கு மாறி, சொற்புரட்டன், பேச்சுமாறி பேச்சுமாறி வெல்லாம் நாக்கோணல் பற்றினவே, “சொன்னதை மாற்றிப் பேசுதல் வாந்தியெடுத்ததை உண்டல்” என என உவமை வகையில் வசை மொழியாக வழங்குகின்றது.

நாடகமாடல் - இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றல்

நாடகம் உயர்ந்த கலை; எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால் ‘நாடகக்காட்சி’ நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று நிகழ்ந்ததாக எவரும் கொள்ளார். அது நடிப்புத்திறம் காட்ட வல்லகலை; அது கலையே அன்றி வாழ் வன்று நாடகமே வாழ்வாகி விட்டால், வாழ்வு என்னாகும்?

66

66

இவ்வளவு தெரிந்தும் என்னிடமே நாடகமாடுகின்றான்" என்றும், என்ன நடிப்பு நடிக்கின்றான்" என்றும் உவர்ப்பால் சொல்லுவது உண்டு. ‘பசப்புதல்” என்பதும் ஒருவகையில் நாடக மாடுதல் போன்றதே.