பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

நாடல் - நெருங்குதல்

109

நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக் கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும், அவர்கள் விரும்புவன செய்தலும் எல்லாம் நெருக்கத்தின் மேல் நெருக்கமாக அமைவன. “ஆரிருந்தால் என்ன அவனுக்கு அவள் மேல்தான் நாட்டம்; பாரேன் குழைவதை! என்பதில் நாட்டம் விருப்பத்தின் வழியாக வந்த நெருக்கத்தைக் காட்டுவதாம். என்னை நாடினான்’ என்பதில் நெருங்கினான்' என்பதே பொருளாதல் அறிக.

நாடிபார்த்தல் - ஆராய்தல்

“அவன் ஆளென்ன, பேரென்ன!” என்னை நாடி பார்க்கி றான்”! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும்.

L

நாடிபார்த்து நோய் இன்னதென அறிதல் மருத்துவ நெறி. அந்நெறியைத் தழுவிவந்த வழக்கு நாடி பார்த்தலாம். பதம் பார்த்தல் என்பதும் அது. நாடி பார்த்தல், நாடிப் பார்த்தலும் (துப்பறிதலும்) கொண்டதே.

நாடியைப் பிடித்தல் - கெஞ்சல்

உதவிவேண்டியோ, சய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம் என்னும் பொருட்டது. இந்நாடியைப் பிடித்தல் கெஞ்சிக் கேட்டல் வழிப் பட்டது. நாடியைப் பிடித்தல் உரிமைப்பட்டவர் செய்கை காலைப்பிடித்தல் அவ்வுரிமை கருதாத பொதுமைத் தன்மை யுடையது. “நாடியைப் பிடிக்கிறேன்; நான் கேட்டதை இல்லை என்று சொல்லிவிடாதே” என்பது வழக்கு.

நாய்ப்பிழைப்பு - இழிவு, ஓயாதலைதல்

நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப் படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படி யாக இருந்துவிடுவதும் அதற்கு வழக்கமே. அதனால்தான் “நாய்க்குகன் என்றெனை ஓதாரோ” என நன்றி மறப்புச் சான்றாக நாயைக் குகன் வழியே கம்பர் குறித்தார்.