பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

1

மற்றும், நாய் எத்துணைப் பொருள் கிடைப்பினும் இழி பொருள் எச்சில் இலை தேடலை விடுதல் இல்லை; வேலையின்றி ஓயாதலை தலை ஒழிதலில்லை; தன்னினத்தைக் கண்டால் காரணம் இல்லாமலே குரைத்தல் கடித்துக் குதறுதல், உண் டதைக் கக்கி அதனைப் பின் உண்டல் ஆகியவற்றைச் செய்யா மல் இருப்பதில்லை. ஆகலின், இவற்றைக் குறித்தே இழிவுப் பொருள் ஏற்பட்டதாம். அதனால், ‘இது என்ன நாய்ப் பிழைப்பு' என வழக்கு மொழி உண்டாயிற்று.

நாவசைத்தல் - ஆணையிடல்

66

நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொரு ளிலும் வழங்குகின்றது. அவன் நாவசைத்தால் போதும்; நாடே அசையும்” என்பது நாவசைத்தல் - ஆணை என்னும் பொருளாதலை விளக்கும். “நீங்கள் நாவை வ அசைத்தால் போதும்; நான் முடித்துவிடுவேன்" என்பது ஆணை கேட்டு உட்படுவார் வேண்டுகை உரை.

நாறிப்போதல் - அருவறுப்பான குணம், இழிமை

நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்கமுடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும் வறுக்கத்தக்க மணமும் நாறுதலே. 'பீநாறி' என்பதொரு செடிப் பெயர். அதன் தன்மையை இனி விளக்கவேண்டிய தில்லையே. இந்நாறுதல் மூக்கை நாறச் செய்யாமல் மனத்தில் நாறுதலை உண்டாக்கும் இழிசெயல் செய்வதைக் குறிப்பதாக வழங்குகின்றது. அவன் பிழைப்பு நாறிப் போயிற்று. அவன் நாறின பயல்; பீநாறிப்பயல் என்பனவெல்லாம் நாறிப்போதல் பொருளை நவில்வன.

நீட்டல் - தருதல், அடித்தல், பெருகப்பேசல்

கைந்நீட்டல் தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றி யும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் என்பது கைந்நீட்டல் போல வந்தது.

"நீட்டிக் குறைக்க நெடும்பகை” என்பது கொடைப் பொருள் தரும் நீட்டல். “இனி நீட்டினால் என்கையும் நீளும்” என்பது அடித்தல் பொருள் தரும் நீட்டல்.