பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் 1

பெரிய ஆள் - சின்னவன்

பெரியஆள் என்பது பெருமாள். பெருமகள் என்பதும் பெருமாள் ஆம். திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது, “ஓங்கி உயர்ந்த உத்தமன்” நீர்செல் நிமிர்ந்த மா அல்” எனப் பாராட்டப்படுகிறது. இவண், 'பெரிய' என்பது சொல்லளவில் பெருமை சுட்டப்படினும் பொருளளவில் சிறுமை சுட்டுவதாக எள்ளற் பொருளில் வழங்குகின்றது. “வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை; நீ பெரிய ஆள்தான்” நீ பெரிய ஆள்தான் பேசும்போது என்ன பேசினாய்; இப்போது என்ன செய்கிறாய்" என்பவற்றில் சிறுமைக் குறிப்புண்மை அறிக. கல்லைக் கடித்துக்கொண்டு நல்ல சமையல் எனின் பாராட்டாகுமா? அத்தகையது இப்பெரிய ஆள்!

பேச்சில்லாமை

பகைமை

பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால் பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்த லால் அதனை இல்லாமை மற்றைத்தொடர்புகளெல்லாம் இல்லை என்பதை வெளிப்படுத்தும். இதனைப் னைப் ‘பேச்சு வார்த்தை’ எங்களுக்குள் இல்லை எனச் சொல்லும் வழக்கால் தெரிந்து கொள்ளலாம். பேச்சில்லாமை அமைதிப் பொருளை இழந்து, உறவின்மைப் பொருளுக்கு ஆயிற்று. அவ்வுறவு உடலுற விற்கும் கூட உண்டாவதாயிற்று. பேசுதல் உடல் தொடர்பும், பேசாமை அஃதின்மையும் குறித்தல் வழக்கு.

பேசமறத்தல் - சாதல்

பேசமறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கலவழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்கு கின்றது எனலாம். “அவர் பேச மறந்து போனார்.” என இறந்த வரைக் குறிப்பர். “மூச்சுவிட மறந்து விட்டார்” வாயைப் பிளந்து விட்டார்." "கண்ணை மூடி விட்டார்” “வானத்தை நோக்கி விட்டார்” “மூச்சை அடக்கி விட்டார்” அ ஒடுங்கி விட்டார்”

66

66

‘அடங்கி விட்டார்” என்பனவெல்லாம் இப் பொருளவே. பேசுதல் – பாலுறவாடல்

பேசுதல் வாய்ப்பேச்சைக் குறிக்கும். கையால் சொல்லு தலும் (கைக் குறியால் காட்டுதலும்) ஒரு வகைப் பேச்சே. முகக் குறி வெளிப்பாடு அகக் குறி வெளிப்பாடே என்பது வள்ளுவர்