146
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும். எனினும் அவற்றை ‘மீள்’ என்னும் அடையின்றி வழங்குதல் அளவே அமைந்தது. ஆனால், இறப்பு பின்னே விழிப்பாக அமையாமல் மீளா உறக்கமாகவே அமைந்து விடுவதால் இறப்புப் பொருள் கொண்டது. போர்க் களம் சென்று மீளல் மீட்சியாம். களத்தில் மடிந்தவர்க்கு மீட்சி இல்லையே, ஆதலால் மீளா உறக்கம், மீளாச் செலவு, 'திரும்பாப்பயணம் என்பவை இறப்புப் பொருளில் உண்
டாயின.
முக்காடு போடல் - இழிவுறுதல்
முக்காடுபோடுதல் சமயக் கோட்பாடாகக் கொண்டார் உளர். கைம்மைக் குறியாகக் கொண்டாரும் உளர். அவரை லக்கிய முக்காடு இது. இந்நாளில் முக்காட்டு வழக்கெனக் காவல் துறையார் காட்டும் முக்காட்டினும் இம்முக்காடு வேறு பட்டது. "உன்னைப் பெற்றதற்கு முக்காடு போட வைத்து விட்டாய்” என்பதில் முகங்காட்ட முடியாத இழிவுக்கு ஆட் படுத்திவிட்டாய் என்னும் குறை மானக் கொடுமைக் குறிப்பு உண்மை அறிக. இழிவுக்கு ஆட்பட்டு அதனை உணரும் மான முடையார் தம் முகம் காட்ட நாணி முக்காடு போடல் காணக் கூடியதே. நான்குபேர் முன் தலைகாட்ட நாணி, தலைமறைந்து செல்லலும் காணக் கூடியதே. ஆதலின் முக்காடு இழிவுக் குறியாக இவ்வழியில் இயல்கின்றதாம்.
முகங்கொடுத்தல் - பார்த்தல்
சவிகொடுத்தல், கேட்டல் பொருள் தருவது போல முகங்கொடுத்தல் என்பது பார்த்தல் பொருளதாம். “முகங் கொடுத்துப் பார்க்கிறானா?” என்பதோர் ஏக்க வினா “முகங் கொடுத்தே பாராதவன் தானா/ அகங் கொடுத்துப் பார்க்கப் போகிறான்” என்பது தெளிவு விடை. முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது பழமொழி. என் முகத்தை நான் கண்ணாடி யால் காணலாம். அது போலவே என் முன்னால் இருப்பவர் முகத்தின் வழியேயும் என் முகத்தைக் காணலாம். அவர் முகம் நகைப்புடன் இருந்தால் என் முகமும் அத்தகையது என்றும் அவர் முகம் கடுகடுத்திருந்தால் என் முகமும் அத்தகைத்து என்றும் கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்துக் கொள்ள லாம் என்பதே அது.