பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

1

படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து, நல்லியல் பழிந்து போனால் பாலை எனப்படும் என்பார் இளங்கோ வடிகளார். அவர்தம் இலக்கணக் குறிப்பைப் பொது மக்கள் மிக எளிமையாக ‘முல்லை மாறி’ என்பதால் வழங்குகின்றனர்.

வளமான வாழ்வைப் பாலையாக்குபவனை முல்லைமாறி என்று வசை கூறுவர். முல்லை மாறி ‘மொல்லை மாறி' என உலக வழக்கில் இக்காலத்தில் வழங்குகின்றது.

முழுகாதிருத்தல் - கருக்கொண்டு இருத்தல்

திங்கள் தோறும் மகளிர்க்கு வரும் முழுக்கு, விலக்கின் வழியே வருவது. அம்முழுக்கு நின்று விடுதலைக் குறிப்பது முழுகா திருத்தல் என்பதாம். முழுகாதிருப்பின் கருக்கொண்டு வயிறு வாய்த்துளாள் என்பது குறிப்பாம். ஆகவே முழுகுதல் என்பது பொது நீராடலையும், ஆடவர் நீராடலையும் விலக்கி மாதவிலக்கு முழுகுதலைக் குறித்ததாயிற்றாம். அம்முழுக்குக் காள்ளாமையே முழுகாதிருத்தலாம். முழுகாதிருக்கிறேன் என்ற செய்தியைக் கேட்ட அளவில் உன்னை முழுகி விட்டேன் என்னும் உட்கோளரும் உளர். அவர் முழுகிக் குளித்தவர்; அதனால் நடுக்கம் இல்லை!

மூக்குடைபடுதல் - இழிவுபடுதல்

மூக்கறுபடல் போல்வதோர் வழக்கு இது. மூக்கை உடைக் காமலே உடைத்தது போன்ற இழிவுக்கு ஆட்படுத்துதல் மூக் குடை படுதலாம். உடைபடுதல் என்பதால் எலும்பை உடைத்தல் என்பது தெளிவாம். அறுத்தல் தோலுக்கு ஆம். அதனினும் வன்மை எலும்பை உடைத்தல். குளம் உடைந்தால் நீர் வழியும்; இவண் குருதிவழியும். மூக்குடைபட்டுக் குருதியொழுகச் செய் வது போல இழிவுறச் செய்தலாம். “நன்றாக மூக்கை உடைத் தாய்; அதற்குப் பின்னர் அவன் வாயைத் திறந்தானா?” என்பதில் இழிவுறுத்தல் பொருள் உள்ளதாம்.

மூக்குச் சீந்தல் - கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல்

அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல், கவலை ஆகிய பொருள்களுக்கு உள்ளாயிற்று. தகுமம் பற்றலாலும் மூக்குச் சீந்தல் நேரும். எனினும் அதனை விலக்கிக் கவலைப் பொருளாதல் வழக்குச் சொல்லாயிற்று. “அழுத கண்ணும் சீந்திய மூக்குமாக” என்பது மரபுத் தொடராக