152
இளங்குமரனார் தமிழ்வளம் மூட்டிவிடுதல் - கோள் கூறல்
―
1
ஒன்றாக்கல் இயைத்தல்,
இரு ரு பக்கத்தை இணைத்து இணைத்து சைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான் காக்கிப் பிரித்து வைப்பதாம்.
தீ
அடுப்பு மூட்டல், நெருப்பு மூட்டல், தீ மூட்டல், எரி மூட்டல் என்பன போல இம் மூட்டல் சினத்தையும் மூண்டெழச் செய்து அதனால் பலப்பல சிதைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆட்படுத்துதலாம். மூட்டி விடுதல் மாட்டிவிடுதல் என்பன வெல்லாம் கெடுவழிப் பிறந்த கேடர் கைப்பொருள்கள். “மாட்டுவதில் பரிய ஆள் என்னும் வழக்கில் பெருமையின் சிறுமை வெளிப்படை.
மூட்டை கட்டல் - புறப்படல்
உள்ள
ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு ‘கட்டு சோறு' எனவும் வழங்கும். சோற்று மூட்டை என்பதும் அது. சோற்று மூட்டை கட்டினால் வேற்றூர்ச் செலவுண்டு என்பது வெளிப்படை. இனி வேற்றூரில் நிலையாகத் தங்கச் செல்வார் தம் உடை மைகளை மூட்டை கட்டிக்கொண்டு போதல் உண்டு. பெட்டியில் போட்டாலும், ாலும், உந்துகளில், உந்துகளில், தொடரிகளில் கொண்டு சென்றாலும் மூட்டை முடிச்சுகளே அவை. ஆதலால் மூட்டை கட்டல் என்பது இடம் விட்டுப் புறப்படல் பொருளில் வழங்குகின்றது. ஓயாது இடமாறிச் செல்வார். “மூட்டை கட்டுவதே என் பிழைப்பாகிவிட்டது” என்பதுண்டு.
மூடம் - கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல்
ம
மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறி யாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால் மூடப் பட்டிருப்பதாம்.
மூட்டம் என்பது மாந்தரால் போடப்படுவதாம். வாழைக் காயைப் பழுக்க வைக்கப் புகை மூட்டம் போடுவது வழக்கு. பாலடுப்பிற்கு உமிமூட்டம்போட்டுக் கொழுந்துவிட்டு எரியாமல் மூடுவதும், பானை சட்டி வேகவைக்க மூட்டம் போடுவதும் உண்டு.