பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

155

தலையை மொட்டை போட்டால் ல் மழுக்கையாதல் போல உள்ளவை உரியவை எல்லாம் இல்லாமல் செய்வதே மொட்டை L யடித்தலாகின்றது.

மொட்டையன், மொட்டைச்சி என்னும் வழக்கு வேறு. அது தலையைக் குறித்த வழக்கு இங்குச் செல்வத்தைக் குறித்த வழக்கு.

மொண்ணை கூர்மை இல்லாமை

மொட்டை, மழுக்கை என்பவை போன்ற பொருளதே மொண்ணை. முனைஅல்லது நுனை மழுங்கிய கருவி மொண்ணை எனப்படும். அவ்வாறே கூர்ப்பில்லாதவன் (மூடன்) மொண்ணை யன் எனப்படுவான். இனி ஆண்மைத் திறம் இல்லாதவனும் மொண்ணை எனப்படுவான். அவன் சரியான மொண்ணைப் பயல். அவனுக்கு எதற்குக் குடியும் குடித்தனமும் என ஒதுக்கும் உரையால் அப்பொருள் வெளிப்படும். பேச்சாற்றல் இல்லாத மூங்கையன் மொண்ணையன் எனப்படுதலும் அருகிய வழக்காம். மொய்வைத்தல் - பணம் தருதல்

மொய்த்தல் என்பது பலவாக நெருங்குதல், ஈமொய்த்தல் எறும்பு மொய்த்தல் என்பன வழக்குகள். ஒரே வேளையில் பலரும் கூடிச் சேர்ந்து கொடை தருவதால் மொய் எனப்பட்டது. இப்பொழுது ‘மொய்'ப் பணம் எழுத்தாக இருப்பதால் மொய் எழுதுதல் என்னும் வழக்கு உண்டாகியுள்ளது.

மொய் என்பது இரங்கல் நிகழ்ச்சித் தொடர்பாகவே நிகழும் பணக் கொடையாம். சுருள் மங்கல நிகழ்ச்சித் தொடர் பாகவே நிகழும் பணக் கொடையாம். இவ்வியல்பு மாறி இரண் டற்கும் இரண்டும் வழங்குவதும் சில இடங்களில் உண்டு. வடிப்பம் – அழகு, கூர்மை

-

வடிவு அழகு; வடிக்கப்பட்ட சிற்பம் வடிப்பமாம். கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உள் நிறுத்தத் தக்க வடிவு வடிப்பம் எனப்படும். அவ்வடிவு வடிவைக் குறியாமல் வடிவின் அமைதியாய் அழகைக் குறிப்பது வழக்காயிற்றாம். சிலர் பெயரே வடிவென வழங்குதல் அறிக. ‘வடிவான் மருட்டுதல்’ என்பது வடிவழகால் மயக்குதல் என்பதாம். வடிக்கப்பட்ட வேல் அழகாக விளங்குவதுடன் கூர்மையும் கொண்டிருப்பதால் அதற்குக் கூர்மைப் பொருளும் உண்டாயிற்றாம். வடிவேல் என்பதும் வழங்கு பெயரே.