பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் 1

வரிதல் - எழுதுதல், கட்டுதல்

வரி என்பது கோடு, வரிதல் எழுதுதல் பொருளது. “என்ன வரிகிறாய்?" வரிந்து தள்ளுகிறாயே எதை?” என்பவற்றில் வரிதல் எழுதுதல் பொருளாதல் அறிக. வரிந்துகட்டு, வரி என்றால் இறுக்கிக் கட்டுதல், இறுக்கு என்பவை பொருள். வேட்டியை வரிந்து கட்டுதல் வரிதல் எனப்படும். வரிதல் இறுக்கிக் கட்டுதல் என்னும் பொருளதே. 'கட்டாயம் என்பது கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய வரி என்பதே. அதில் இருந்தே தீரா நிலை யில் நிறைவேற்றியாக வேண்டிய செயல் 'கட்டாயம்' எனப் பட்டதாம். அரசிறை எனப்படும் ‘வரி’யைத் தவிர்த்தலாகாது என்பதை விளக்குவது கட்டாயச் சொல்லாம். கட்டு + ஆயம் கட்டாயம். கட்ட வேண்டும் வரிப்பணம்.

வலைவீசுதல் - அகப்படுத்துதல்

வலைவீசுதல் என்பது மீன்பிடிப்பதற்காகச் செய்யப் படுவது. வலைவீசல், வலைபோடல், தூண்டில் போடல் என்பன வும் மீனை அகப்படுத்துவதற்கு அல்லது சிக்கவைப்பதற்குச் செய் யும் செயலேயாம். அதே போல் ஒருவர் தாம் விரும்பிய ஒருவரை அகப்படுத்துதற்குச் செய்யும் முயற்சி சூழ்ச்சி - பேச்சு- கண் ணோக்கு என்பவை வலைவீசுதலாக வழக்கில் சொல்லப்படும். வலைவிரித்தல் என்பதும் அகப்படுத்தி எடுத்துக்கொள்ளும் முயற்சியையே குறிக்கும். நேரிய வழியால் அகப்படுத்துதலை, வலைவீசுதல் என்னும் வழக்கம் இல்லை.

வழிக்குவராமை - ஒருவர் செயலில் குறுக்கிடாமை

வழிக்கு வருதல், நெறிப்படல், ஒழுங்குறல் என்னும் பொருள. அவ்வழிக்கு வராதவனைப் பார்த்து ‘எங்கள் வழிக்கு நீ வராதே’ என ஒதுக்கி விடுவது வழக்காம். இவண் வழிக்கு வருதல் என்பது அவர்கள் செயல்களில் பங்குகொள்ளல் ஊடாடுதல் என்பனவாம். “வழியே ஏகுக; வழியே மீளுக என்பது வழியறிந்தோர் வழி. இவ்வழி கெட்டோர் வழி. வழியை அழிப்பதே. எப்படி இணையும் இருவர் வழியும்? ஆதலால்; “வழிக்கு வராதே” என விலக்குதலே தற்காப்பாம்.

வழுக்குதல் - ஒழுக்கம் தவறல்

வழுக்கி விழுதல் என்பதும் அது. ‘வழுக்கி விழுந்தவள்’ எனப்பெண்ணைப் பழிக்கும் ஆணுலகம் - ஏன் பெண்ணுலகமும் கூட, ஆணை வழுக்கி விழுந்தவனாகச் சொல்வது இல்லை.