பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பாளன் தொகையுரை

‘வழக்கு’ என்றால், ‘உலகியல் வழக்கை’யே குறித்த தொல்காலம் ஒன்று இருந்தது. அதன் பின்னரே, 'நூல் வழக்கு' என்னும் ஒரு வழக்கு உண்டாயிற்று. இந் நுண்ணிய இயலை வெளிப்பட விளக்குவது போல், நம் பழந்த தமிழ் மரபைக் காக்கும் வழிநூலாக அமைந்துள்ள தொல்காப்பியப் பாயிர ஆட்சியுள்ளது. “வழக்கும் செய்யுளும்” ஆயிரு முதலின்” என்பது

அது.

‘வழக்குச் சொல் அகராதி’ என்னும் பெயரிய இத்தொகை விளக்கநூல். மிகப்பெரிதும் உலகியல் வழக்குத் தொகுப் பேயாகும். இத் தொகுப்பு முடிவடைந்த ஒன்று என எவரும் கருதார். எத்தகு பெருந் தொகுப்பே எனினும், காலந்தொறும் இடந்தொறும் ஆள்தொறும் பெருகிவரும் பேராறு அன்ன உலகியல் வழக்கை, இவ்வளவே’ என அறுதிகட்டிவிட இயலாது. அவ்வகையில் இஃதோர் சிறு தொகுப்பு என்னத் தகும். இத் தொகுப்பு, காலந்தொறும் பெருகுதல் வேண்டும்; தமிழ்த் தொண்டர்களால் பெருக்கப் படுதலும் வேண்டும். சொற்பொருள் அகரமுதலிகள் இருக்கவும், இவ்வகர முதலிப் பயனென்னை எனின், ஓரிரு சொற்களைப் பார்த்த அளவானே இவ்வினவுதலுக்குரிய விடை வெளிப்பட விளங்கும்.

அகப்பை என்பதற்குச் என்பதற்குச் ‘சோறு' என்னும் பொருள் வழக்கு உண்மை, அவர்' என்பதற்குக் கணவர்’ என்னும் பொருள் உண்மை, ‘அழுதல்' என்பதற்குக் கொடைப் பொருள் உண்மை, ‘இக்கன்னாப்போடுதல்' என்பதற்குத் தடைப்படுத்தல் அல்லது தடுத்தல் என்னும் பொருள் உண்மை அகர முதலிகளில் காணற்கு அரியவை; இல்லாதவையும் கூட!

'கொண்டை போடுதல்’ நாகரிகம் இல்லாமையையும்

'கொசு விரட்டல்’ வணிகச் சீர் கெடுதலையும்,

‘தூசி தட்டல்' விலையாகாமையையும்,

‘மூட்டை கட்டல்' புறப்படுதலையும்,