பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

171

வெள்' வழி வந்தனவே. ஆனால் ‘கள்’ளுக்கு வெள்ளை என்பது வியப்பானதே. கள், கருமைப் பொருளது. மதியை மயக்குவதால் அதனைக் கள் என்றனர். ‘காரறிவு’க்கு இடமாவது என்பது அது. ஆனால் கள்ளின் நிறம் வெள்ளையாதலால் கட்குடியர் கள்ளை வள்ளை என்றும், வெள்ளைத் தண்ணீர் என்றும் குறிப்பர். வள்ளைக் குதிரையில் வருதல் என்பதும் அதுவே. காரறிவு ஆக்குவது கள் என்பது தெரிந்தாலும் குடியர் ஒப்புவது ல்லையே. அதனால் வெள்ளை என்பதே அவர்கள் விருப்பு. வெளிச்சம் போடல் - பகட்டுதல். விளம்பரப்படுத்துதல்

சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். அதி லேயே பேரின்பங்காண்பர். அத்தகையரை வெளிச்சம் போடுபவ ராகக் கூறுவர். இருட்டில் இருக்கும் ஒன்றோ, மூடி வைக்கப் பட்ட ஒன்றோ பிறரால் அறியப்படுவது அருமையாம். அத னால் அவர்கள் தன்மையையும் செய்கையையும் பரபரப்பு மிக்க உலகம் அறிந்து கொள்வது இல்லை. ஆனால் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வேட்கையுடையவர்களை உலகம் வெளிப்பட அறிகிறது. தான் விரும்பாவிட்டாலும் கூட உலகம், அத்தகையரைப் பொருட்டாக எண்ணவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடுகிறது. வெளிச்சம் போடல் விளக் கேற்றலைக் குறியாமல் விளம்பரப்படுதலைக் குறித்தல் வழக்குச் சொல்லாம்.

வெளுத்துக்கட்டல் - வெற்றி பெறல்

வளுத்தல், அழுக்குப் போக்கல், வெள்ளையாக்கல் என்னும் பொருள். இருளகற்றல் என்பது வெளிச்சப் பொருள. வ்வெளுத்துக்கட்டல் பளிச்சிடக் காட்டலாம். பத்துப்பேர்கள் ஒரு மேடையில் உரையாற்ற அவர்களில் ஒருவர் சொல்லாலும் கருத்தாலும் உயர்ந்து நின்றால் நீங்கள் வெளுத்துக் கட்டி விட்டீர்கள் என்பர். இதில் வெளுத்துக் கட்டல் பிறர் குறை களையும் கறைகளும் வெளிப்படக்காட்டி உண்மையை வெளிப் படுத்தலாம். ஆதலால் வெளுத்துக் கட்டல் வெற்றிப் பொருள் தருவதாயிற்றாம்.

வெற்றிலை போடுதல் - உவப்புறுதல்

வெற்றிலை மங்கலப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. வெற்றிலை வைத்து அழைத்தல் திருமண அழைப்பாகும். வெற் றிலை தருதல் உறுதி மொழிதல், அமைதிப்படுதல் ஆய