பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

'வேகாமை’

அத்தகையவே.)

இளங்குமரனார் தமிழ்வளம் 1

குறித்தலும்

நடைபெறாமையையும்

ணைச்சொல் அகராதி’ என்னும் பெயரிய நூல் கழகத்தின் வழி முன்னே வெளிவந்தது. உலக வழக்குக் கொடையால் வெளிப் பட்டது அது என்றால், அதனினும் முற்றாக உலக வழக்குக் யாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சால்

து

காடை

அகராதியாகும்.

பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், 'பழமையான கழியவும், புதியன புகவும்' ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். ஆதலால், அத் தொகை. மொழிவளம் காட்டுவதுடன், வரலாறு வாழ்வியல், படிப்பினை இன்னவற்றுக்கும் பயன்பாடு மிகச் செய்தவை எண்ணித் தொகுக்கப்பட்டது இத் தாகையாம்.

பல்துறையாய்வாளர்களுக்கும்

கருவிநூல்களைப்

படைத்துத் தருதலைக் கடப்பாடாகக் கொண்டவர் மேலை நாள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் அவர்கள். தமிழ்த் துறைகள் பலப் பலவற்றைத் தூண்டியும் துலக்கியும் கருவி நூல்கள் தோற்றுவித்தும் படைப்பித்தும் பல்லபல நல்லபணி செய்தவர்கள் அவர்கள்.

தமிழ் ஆட்சி மொழி சட்டம் தோற்றுதற்கு முன்னரே சி மொழிநூல்கள், பயிற்று மொழி பைந்தமிழே என்பதை உருவாக்குதற்கு அறுபான் ஆண்டுகளின் முன்னரே கலைச் சொல்லாக்க மாநாடுகள் கூட்டிப் பல்துறை நூல்கள் வெளியிடல், தமிழில் சட்டத்துறை முதலாம் துறைகளை நடாத்து தற்குச் சட்டத்துறை முதலாம் நூல்கள் வெளியீடு, தமிழ் வழிபாட்டுக்கு ஏந்தாம் மலர் வழிபாட்டு நூல்கள், போற்றி நூல்கள் படைத்தல், தனித் தமிழ் வளர்ச்சிக்கும் திருக்குறள் பரப்புதற்கும் ஏந்தாம் வழிதுறைகளைக் கண்டு கண்டு களப்பணியாளிபோல் கடனாற்றல் இன்ன வெல்லாம் செய்தார்கள். புலவர் அகராதி, சிறப்புப் பெயர் அகராதி, தமிழ் ஆங்கில அகராதி எனப்பல அகராதிகளும் ஆக்கித் தொண்டாற்றினார்கள். அவ்வகையில் தொடர்ந்து முன்னே இணைச்சொல் அகராதியையும் இதுகால் வழக்குச்சொல் அகராதியையும் அவர்கள் அருமை மருகரும் இந்நாள் கழக ஆட்சியாளரும் ஆகிய திருமிகு ரா. முத்துக்குமாரசாமி அவர்கள் எம்.ஏ.பிலிட். கழக வழியே