பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம்

1

தமிழகம் முழுவதும் தழுவும் பொழிவு நிகழ்வுகளும் கரண நிகழ்வுகளும் வளர் நிலையில், 1985 முதல் ஈரோடு, கோவை, சேலம், குழித்தலை, திருச்சி, நெய்வேலி, புதுவை, வேலூர், தஞ்சை, குடந்தை எனக் கூடின. 1994இல் திருச்சிக் காவிரித் தென்கரை அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை என் வாழ்விடமாக மாறியது. இன்னவை வட்டார வழக்குச் சொற்றொகுப்புக்கும் விளக்கம் வரைதற்கும் உதவின.

இவ்வட்டார வழக்குச் சொற்கள் பெரும்பயன் செய்வன. தமிழ் நிகண்டு, அகரமுதலி, படைப்பிலக்கியம் இன்னவற்றில் இதுகாறும் இடம் பெறாத சொற்கள் பெரும்பாலனவாகக் கிட்டுகின்றன. பாவாணர் துறையில் எனக்குத் தொகுப்பாளன் நிலையில் வழங்கப்பட்டபணி, அகரமுதலியில் இடம் பெறாத இலக்கிய இலக்கணச் சொற்களையும் பிறதுறைச் சொற்களையும் வட்டார வழக்குச் சொற்களையும் தொகுத்துப்பொருள் விளக்கம் வரைதலேயாம். ஆதலால் இப்பணி, அப்பணியின் தொடர் பணியாய் இன்புறச் செய்யப்பட்டது என்க.

L

இன்னும் கொங்குமண்ட காங்குமண்டலம், லம், தொண்டை மண்டலம், தில்லை கடலூர் புதுவை இன்னபகுதி வழக்குச் சொற்களைக் கேட்டும் விளக்கம் அறிந்தும் பெருக்கவேண்டிய பணி இதுவாம். இங்குக் குறிக்கப்பட்ட வட்டார விளக்கச் சொற்களையன்றிப் பிற இல்லையோ எனின், நல்ல ஆர்வலர் மொழித் தொண்டர் ஆங்காங்கு இருந்து தொகுப்பின் இதனினும் பன்மடங்கு விரிவாக்கம் பெறும் என்பது தெளிவாம். இன்னொரு தெளிவு கைம்மேல் கனியாகப் புலப்படுவது. தமிழ் தோன்றி வளர்ந்து முதிர்ந்து வளம் பெருக்கிய மண் குமரிக் கண்டமே என்பதற்கு ஒப்பிலாச் சான்றாக விளங்கும் கருவூலம் இவ்வட்டார வழக்குச் சொற்றொகுதியாகும்.

குமரி மாவட்டத் தமிழ்வளமும் ஆட்சியும் அருமையும் நெல்லை மதுரை திருச்சி என வட க்கே நகர நகரக் குன்றுதலும் குறைதலும் புலப்படுகின்றதாம். இதனை இம் முன்னுரையைக் கொண்டு முடிவு செய்யாமல் நூல் முழு துறக் காண்பார் திட்டவட்டமாகத் தாமே தெரிந்து கொள்வர். திரட்டப்பட்ட பகுதிகள் இவை என்பதால் இம்முடிபு செய்வதன்று. திரட்டப்பட்ட சொல்லின் வளம் மாற்றுக் குறையா ஆணிப்பொன், ஆணிமுத்து என்பன போன்றன என்பதால் உறுதியுறும்.