வட்டார வழக்குச் சொல் அகராதி
191
தெரியாமையாலும் உண்ணாக்கு (உள்நாக்கு) எனவும் படும். இது தென்மாவட்ட வழக்கு.
அண்ணி
அண்ணன் துணைவியார் பொருளு
அண்ணி எனப்படுவார்.
ன், அண்ணி என்பது அணிலைக் குறித்தல்
விளங்கோடு வட்டார வழக்கு.
அணில் ஏதாவது தின்னும் போது முன்னங்காலை மேலே கைபோல் தூக்கி அதில் தீனியை வைத்துத் தின்னுதல் கண்டு வழங்கிய பெயராகலாம் இது.
அண்
மேல்வாய்; அண்ணாத்தல் = வாய் திறத்தல். அணியம்
மேல்; அணல்=
தயார் என்னும் அயற் சொல்லுக்கு ‘அணியம்’என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கி யிருப்பது அணியம் ஆகும்.
இனி அண்மை டம் அணிமை எனப்படுவதுடன் அணியம் எனவும் வழங்குதல் நெல்லை வழக்கு. அணியம் = பக்கம்.
அத்தவனக்காடு
6
=
இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்’ என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும் வழியே. அத்தம் அற்றம் முடிவு. மீமிசைச் சொல் இரு சொல் ஒரு பொருளுடையது. இது முச்சொல் ஒரு ருபொருள் தரும் அருவழக்காகும். இது பொது வழக்காகும். தென்னகக் கதைகளில் மிகுவழக்குடையது து.
அத்தாச்சி
அத்தையைப் பெற்றதாய் அத்தை ஆச்சி, அத்தாச்சி எனப்படுதல் மதுரை வழக்கு. ஆய்ச்சி = ஆயர் மகளிர். ஆச்சி அம்மை, அம்மையைப் பெற்றவள்.
அப்பாச்சி
அப்பாவைப் பெற்றதாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவதுபோல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை