குண்
வட்டார வழக்குச் சொல் அகராதி
195
ாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை அரித்தல் என்பதும் பொதுவழக்கே. அரிப்புத் தொழிலர் அரிக்காரர்.
அரியா
தூக்குச் சட்டியை அரியா என்பது பரதவர் (வலைஞர்) வழக்கமாகும். அரி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறிய தூக்குச் சட்டியை அரியா அரியா என வழங்கிப் பொதுப் பெயராகி யிருக்க வேண்டும்.
அரியாடு
என
அர், அரத்தம், அரி, அரு என்னும் அடிச்சொற்களின் வழியாக வரும் சொற்கள் செவ்வண்ணம் குறித்து வரும். அம் முறைப்படியே அரியாடு என்று, சிவப்புநிற ஆட்டைக் குறிப்பது ஆயர் வழக்கமாம். இலக்கிய வளமுடைய ஆட்சி இது.
அருமைக்காரர்
திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா. அவ்விழாவின் அருமையை - ய சிறப்பை -நினைத்து அதனை ன நிகழ்த்துபவரை அருமைக்காரர் என்பது கருவூர் வட்டார வழக்கு. கொங்கு நாட்டு வழக்குமாம்.
அருவாதல்
கடை யில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென்னக வழக்கு. அருவாதல் x உருவாதல். உரு = உள்ளது. உள்ளது. அரு இல்லாதது. அருவுரு = அருவமும் உருவமும் ஆயது.
அலக்கு
=
முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில் கொண்டுவந்து வெள்ளா விக்குப் பயன்படுத்துதலால் வெளுப்பவர் அல்லது சலவை செய்பவர் அலக்குக்காரர் எனப்படுதல் குமரிமாவட்ட வழக்கு.
அலத்தம்
அலத்தகம் என்பது செம்பஞ்சுக் குழம்பு. இது, இலக்கிய வழக்கு. நாகர் கோயில் வட்டாரத்தில் அலத்தம் என்பது மஞ்சள் நீரைக் குறிக்கிறது. அரத்தகம் அரத்தம் என்பதே அலத்தம் ஆகிச் சிவப்பு என்னும் பொருள் தந்தது. பின்னர் மஞ்சளுக்கு