வட்டார வழக்குச் சொல் அகராதி
201
ஆய்தல் மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது
து. ஆயான்
ஆயன் ஆக்களை வளர்ப்பவன். மேய்ப்பன் என்பானும் அவன். புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ நிலையில் வாழ்ந்தவர். ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர். மற்றும் ஆய்ந்தறிதலும் அறிந்ததை எடுத்துரைத்தலும் கட
ய
மையாக
உடைய ஆசிரியன் ஆயான் எனப்பட்டான் எனலுமாம். ஆயான் என்பதற்குக் குரு என்னும் பொருள் வழக்கு கல்லிடைக் குறிச்சி வட்டாரத்ததாகும்.
ஆர்
"போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் வேந்தர் மலைந்த பூவும்
என்னும் தொல்காப்பிய வழியில் வாய்த்த ஊர் ஆர்க்காடு'. அதுமட்டுமா? ஆரணி ஆர்ப்பாக்கம் என்பனவும் செற்கற் பட்டு மாவட்டம் சார்ந்தவை. ஆர் என்பது ஆத்தி என்ப தாம். பேர்> பேர்த்தி; ஆர்> ஆர்த்தி. பேத்தியும் ஆத்தியும் எண்ணலாம். ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால் அன்று. தெளிவாகக் கூடாது என்னும் தெளிவான முடிவில் எழுதுவதாம்.
ஆரச் சுவர்
=
ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு. ஆரம் = வட்டம், வளையம். மாலை. ஆரை பழமையான இலக்கிய வழக்குச் சொல்.
ஆரியம்
கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப் பூட்டிய அமைப்பில் இருத்தலால் பூட்டை எனப்படும். பூட்டையாவது கட்டமைப்புடைய கதிர்.
ஆர் என்பதன் பொருள்களுள் ஒன்று, கட்டு என்பது. ஆர்த்த பேரன்பு’ ‘ஆர்த்த சபை' என்பவற்றில் வரும் ஆர்த்தல் அப்பொருளது. ஆதலால் கட்டமைந்த கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். சேலம் தருமபுரிப்