பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

அகப்பை - சோறு

அகப்பை, சோறு எடுத்துப் போடும் கருவி. அதனை ஆப்பை எனவும் வழங்குகின்றனர். அகப்பை, கருவியைக் குறியாமல் சோற்றைக் குறிப்பது வழக்கில் உள்ளது.

அகப்பையடி' என்பது சோற்றுக்கு இல்லாமை; ‘அகப்பை நோய்' என்பது வறுமை. ‘வறுமை எனின் எளிய வறுமையன்று; சோற்றுக்கு இல்லாக் கொடிய வறுமை. ‘அகப்பை (அகம்+பை) வயிற்றைக் குறித்தல் இலக்கிய நெறி : அகப் பைக்கு அள்ளியிடும் கருவியை அகப்பை என்றதும்’ அதனைச் சோற்றுக்கு ஆக்கி யதும் வழக்கியல் நெறி.

அகம் -செருக்கு

-

அகம், மனம், மனை, பாவம், டம், உள் முதலிய பொருள் தரும் சொல். ஆயினும் வழக்கில் ‘அகம் உனக்கு மிஞ்சி விட்டது' அகம் பிடித்தவன்' என வருவனவற்றால் அதற்குச் செருக்கு என்னும் பொருள் உண்மை விளங்கும். இதனை ‘அகம் பாவம்’ எனக் கூறுவதும் உண்டு. “அவன் அகம் பாவத்திற்கு ஒரு நாள் அழிவு வராமல் போகாது” என்பதில் அகம் என்பதன் பொருளே அகம்பாவத்திற்கும் உள்ளமை விளங்கும். உள்ளுள் தன்னைப் பருமிதமாக நினைத்துக் கொண்டு பேசுவதாலும். செய லாற்றுவதாலும், 'அகம்' என்பதற்குச் ‘செருக்கு' என்னும் பொருள் ஏற்பட்டதாகலாம்.

அகராதி - ஆணவன், செருக்கன்

அகர முதலாகச் சொற்களை அமைத்துப் பொருள் கூறப் பட்டுள்ள நூல் அகராதி என்பது அனைவரும் அறிந்தது. அகராதி வீரமா முனிவரால் முதற்கண் செய்யப்பட்டது. எனினும் ‘அகராதி நிகண்டு' என ஒரு நூல் அவர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்னரே வந்து விட்டது.

அகர

ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் முதலியவை முறையில் அமைந்தவை. அகராதி என்பது நூற்பெயராக இருக்க