I
ஈச்சி
ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈ என்பது நாடு தழுவிய வழக்கு. அதனை ஈச்சி என்பது குமரிமாவட்ட வழக்கு. அச்சி இச்சி அத்தி இத்தி என்பவை பெயரீறுகளாக இருக்கும் வழக்குத் தழுவியது ஈச்சி என்பது. ஈ(இ)ச்சி = ஈச்சி.
ஈப்புலி
மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையர் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார். மாட்டீ பெரியது. ஒட்டிக் கொண்டு குருதியை உறிஞ்சி எடுப்பது. அவ்வாறு உறிஞ்சு வாழ்வு, ஈப்புலி வாழ்வாம்.
ஈசு
6
மாளம் என்னும் என்னும் பொருளில் ஈசு பாருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஈசுரன், ஈச்சுரம், ஈசுவரன், ஈசுவரி, என்பவை பெருமைக்குரிய இறைவன் இறைவியரைக் குறிப்பது கருதலாம். மானம் என்பது பெருமை என்னும் பொருளில் வருதல் அறிந்ததே.
ஈத்தை
ய
உள்வயிரம் இல்லாத புல்லினப் பயிர்களின் அடியை ஈத்தை என்பர். மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு. வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு. மெலிந்தவனை ஈத்தை என எள்ளலும் இவ்விழிப்பட்டதே. கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை வழக்கு.
ஈரலித்தல்
ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும்.