பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ

ஊச்சுப்பிள்ளை

உண்

ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி ாகி விட்டால் இடம் சூழல் எண்ணாமல் பால் குடிக்க அடம் செய்யும். என்ன வகையில் ஏமாற்றினும் தன் எண்ணத்தை மாற்றாது. அவ்வாறு சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ள ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்.

ஊசன்

எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக ருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும். ஊசு - ஊச்சு = உள்வாங்குதல். உள்வாங்குதலை அன்றி வெயியிடாது வைப்பவன் ஊசன் எனப்பட்டான். ஊசிக்கால்

குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். கமலையிலும் குத்துக்கால் உண்டு. இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு.

ஊட்டி

வழங்கப்பட்டதாகலாம்.

அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது, உண்டு கழித்தலை உண்பது கொண்டு பாட்டி என்னும் சொல்லுக்குத் தொல்பழ நாளில் பன்றி என்னும் பொருள் இருந்ததைத் தொல் காப்பிய வழியே அறிய வாய்க்கின்றது. இனி ஊட்டி என்பது பூட்டியைப் பெற்ற ஓட்டியைக் குறிப்பதாகிய வழக்கு உரல் ஓரல், உலக்கை ஒலக்கை என்பவை போல உகர ஒகரத் திரிபாகலாம். ஊட்டு

முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும்;