பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ஐவணை

இளங்குமரனார் தமிழ்வளம் 1

ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. திருமணத்தின் போது பூட்டப்படுவது அது. வணை ண என்பது வ வளைவு (மோதிரம்) குறித்தது. வணங்குதல் = வளைதல்.

ஐவாந்தழை

மகிழ்வாக வாழும் வாழ்வின் அடையாளங்களுள் ஒன்று மருதோன்றி அரைவை பூசி கால், கைகளைச் சிவப் பேற்றல். இனிய வாழ்வின் அடையாளமாகக் கொள்வதால் மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப்படுகின்றது. ஐ = அழகு. வாழும் என்பதில் ‘ழு’ மறைந்து விட்டது. வீழ்வு - வீவு என்றும், வாழ்வரசி, வாவரசி என்றும் வழங்கப்படுவதை நோக்கலாம்.