பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

ஒதுக்கு மருந்து

233

குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு மருந்து என்பது நாகர் கோயில் வட்டார வழக்கு. வேண்டாதவற்றை ஒதுக்கித் தள்ளுவதால் ஒதுக்கு எனப்பட்டது. பொங்கல் நாளில் பழையன கழித்தலும், தாறுமாறாகக் கிடக்கும் பொருள்களை ஒதுக்கி ஒழுங்கு படுத்துவதும் எண்ணத்தக்கன.

ஒலுங்கு

'ஒல்' என்பது ஒலி. ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி கேட்டவர், அவ் வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம். காதருகே வந்து பறக்கும்போது அதன் ஒலி மிக நன்றாகக் கேட்கும். காதுள்ளும் புகுந்தும் ஒலிக்கும். இது தென்னக வழக்கு.

ஒழுங்கை

வரிசையாகச் செல்லும் வண்டிகளை ஒழுகை என்ப தும், வரிசையாகச் செல்லும் 6 எறும்புகளை ஒழுக்கு என்பதும் பழமையான இலக்கிய வழக்கு. ஒழுங்காக அமைந்த தெருவை ஒழுங்கை என்பது யாழ்ப்பாண வழக்கு. இவ்வாட்சியால் தெருவமைப்பு விளங்கும்.

ஒறுத்துவாய்

ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண் வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறு வாய் ஆகிவிட்டது என்பர். அது பழங்காலத்தில் கதுவாய் எனப்படுதல் இலக்கிய இலக்கண ஆட்சிகள். மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்பவை தொடை வகை. அக்கதுவாய் கொறுவாய் எனப்பட்டதுடன் ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும்.