பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வயதில் உனக்குக் கண்டம் இருக்கிறது என்பதும் பொதுமக்கள் அவ்வாறு சொல்வதும் வட்டார வழக்காகும். கண்டம் என்பதற்கு ‘முள்' என்னும் பொருள் மருத்துவ வழக்கு. எ-டு: கண்டங்கத்திரி: பொது இலக்கிய வழக்கும் உண்டு. கண்டல் வேலி (சிலப்பதிகாரம்) கண்டல் = தாழை. குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும்.

கண்டு:

எ-டு:

உருட்டித் திரட்டப்படுவதைக் கண்டு என்பது வழக்கு. எ- டு: நூற்கண்டு, கற்கண்டு. இனி விளையாட்டுகளில் ஒன்று ஒளிந்து விளையாடல். அதனைக் கண்டுபிடித்தல் என்பர். கண்டு என்பது கண்ணால் கண்டு என்பது. கண்டுபிடித்தல் என்னாது கண்டு என்று அதனைக் கூறுவது குமரி மாவட்ட வாத்தியார் விளை வட்டார வழக்காகும்.

கண்ணப்பச்சி:

அப்பச்சி என்பதுஅம்மை அப்பன் ஆகிய இருவரை யும் குறிப்பதாக இருந்து பின்னர் அப்பனை மட்டும் குறித்து வழங்குவதாயிற்று. அப்பு அப்பா; ஆண்பால்; அச்சன்: அதன் பெண்பால் அச்சி. அப்பு என்பதும் அப்பா என்னும் பொருளது. என்ன அப்பு' என்பது இன்றும் வழக்கு. இக் கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும். அதுபோல் கண்ணம்மா என்பது அம்மாவின் அம்மாவைக் குறிப்பதாகவும் நெல்லை வட்டாரத்தில் உண்டு.

கண்ணமுது:

பாயசம் என்பது ‘கன்னலமுது' ஆகும். கன்னல் கரும்பு இனிப்பு. ஆழ்வார்கள் வழக்கில் கண்ணமுது என்பது பாயசக் குறிப்பினது. பெருமாள் கோயில்களின் விளம்பரப் பலகை களில் கண்ணமுது இட ம்பெறும். சாற்றமுது சாற்றமுது (இரசம்) மிளகுசாறு முதலியவை.

கண்ணி:

கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும். எ-டு: கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி. கண்கள் போல் இணையாகத் தொடுக்கப்படும் மாலை கண்ணி எனப்படும். "கண்ணி கார்நறுங் கொன்றை” அகம். வெற்றிலைக் கொடிக் காலில் இரட்டை இரட்டை யாக அமைந்த கொடி வரிசை