பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

11

செலுத்துதல் அரவணைப்பு என வழங்கப்படும் வழக்கம் உண்டு. வேறுபாடற அப்பாம்புகள் பின்னிக்கிடக்கும் நிலையில் உள மொத்து அன்பு பாராட்டலே அரவணைப்பென ன் உவமை வழக்காக வழங்குகின்றதாம். 'மாசுணப் புணர்ச்சி' என்பது சிந்தா மணி. மாசுணம் என்பது பாம்பு.

அரித்தெடுத்தல் - முயன்று வாங்குதல்

அரிப்பெடுத்தல் வேறு; அரித்தெடுத்தல் வேறு.

பொற்கொல்லர் பணிக்குப் பயன்படுத்திய கரித்துகளைக் கூடைக் கணக்கில் விலைக்கு விற்பது வழக்கம். அதனை வாங்கி யவர்கள் கரியைச் சல்லடையில் போட்டு அலசி எடுத்து தூளை நீரில் இட்டுக் கரைத்துப் பொற்றுகள் இருப்பின் எடுப்பது வழக்கம். அரும்பாடுபட்டுச் சலிப்பில்லாமல் அரித்தால் வீண் போகாது. அதுபோல் பலகால் விடாது கேட்டுக் கேட்டு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார் உளர். அவர் செயலை அரித்தெடுத்தல் என்பது வழக்காயிற்று.

அரிப்பெடுத்தல் - சினமுண்டாதல், பால்வெறியுண்டாதல்.

அரிப்பு என்பது ஊறல், வியர்க்குறு, வெப்பு இவற்றால் தோலில் பொரியுண்டாகும் போது, அதனால் தினவுண்டாவது அரிப்பு எனப்படும். செந்தட்டி, தட்டுப்பலா முதலிய செடிகள் படினும் அரிப்பு உண்டாகும். ஆனால் இவ்வரிப்பு அதனைக் குறியாமல் மன அரிப்பு அல்லது மன எரிச்சலாம் சினத்தையும், பாலுறவு தேடும் வெறியையும் குறிப்பதாக வழங்குகின்றது. ‘அரிசினம்' என்பது ஆழ்வார் ஆட்சி. அரிப்பெடுத்துத் திரி கிறான் என இகழ்வது பின்னதாம் பொருளது; அரி என்பதற்கு எரி என்னும் பொருளுண்டென்பது அறியத்தக்கது. அரைத்தல் - தின்னுதல்

ஓயாமல் ஒழியாமல் தின்று கொண்டிருப்பதை ‘அரைத் தல்' என்பது வழக்கு. ‘அரைவை நடக்கிறது போலிருக்கிறதே’ என்பதும் அரைவையாளியிடம் நகைப்பாகக் கேட்கும் கேள்வி.

அரைத்தல் அம்மியில் நிகழும். அரைவை ஆலைகளும் பொழுது எங்கும் காண்பன. அம்மியும், அரைவைப் பொறி யும் இல்லாமலே அரைக்கவல்லான், குடியை அரைக்காமல் விடுவானா? மெல்லெனச் சுருங்கத் தின்பானைக் குறிப்பதன்று அரைவை. அவனுக்கு எதிரிடையானைக் குறிப்பது.