பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

285

மூட்டும் வார் ‘கொளஞ்சி வார்' என்பது பரம்பர் (சக்கிலியர், தோல் தையலர், துன்னகாரர்) வழக்கில் உள்ளது.

கொளுத்திக் கொடுத்தல்:

தூண்டுதல் என்னும் பொருளில் இச் சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில் எண்ணெய் திரி இருந்தாலும் சுடர் குறையும் போது திரியைச் சற்றே தூண்டி (மேலேற்றி) விட்டால் பளிச்சிட்டு எரியும். அதுபோல் சிலர்தாமே செயலாற்ற மாட்டார். அவரைத் தூண்டிவிட்டால் சிறந்த பணி செய்வார். இதனைச் சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும் என்னும் பழமொழி விளக்கும். கொளுத்தக் கொண்டு கொண்டது விட ாமை என்பது ‘மடம்’ என்பதன் பொருளாக உரையாசிரியர் கூறுவர்.

கொளுத்து:

சங்கிலின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திரு யினார் குறிச்சி வட்ட வட்டார வழக்கு ஆகும். கொக்கியை வளையத்துள் மாட்டுதலே பூட்டுதல் ஆகும். ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளுமாறு வைப்பது கொளுத்து ஆயிற்று. தீயும் திரியும் அல்லது பற்று பொருளும் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ள வைப்பதே கொளுத்துதல் என்பதை ஒப்பிட்டுக் காணலாம். கொள்ளி, கொள்ளை என்பனவும் கொள்ளுதல் வகையால் அமைந்தவையே.

கொளுத்தோட்டி:

வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும். கொக்கி அல்லது அரிவாளைக் கொண்ட கழையைக் கொளுத்தோட்டி என்பது அத்தீசுவர வட்டார வழக்காகும்.

கொறி:

காறிப்பு என்பது என்பது மெல்லுதல்; சற்றே கடுமையாக மெல்லுதலே கொறித்தல் எனப்படும். மெல்லுதல் போல அழியச் செய்யும் கண்ணேறு என்னும் நம்பிக்கையால் கொறி என்பதைக் கண்ணேறு என்னும் பொருளில் தூத்துக்குடி வட்டாரத்தார் வழங்குகின்றனர்.