சரணை:
வட்டார வழக்குச் சொல் அகராதி
295
ர
ஓரம் சாரம்’ என்பது இணை மொழி; ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரம் சாரம் ஆகும். சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது. மலைச் சாரல், மலை சார்ந்தது மழைச்சாரல் மழையைச் சார்ந்து பெய்யும் சிறு தூறல். 'சாரல் நாடன்’, சாரலன், ‘சேரலன்’, ‘சேரன்’ ஆனான்.
சல் தண்ணீர்:
பயிருக்கு நீர்பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல் தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு. ஈரம் இருப்பதால் சலசலத்து ஓடும் நீரைச் சல் தண்ணீர் என்பது ஒலிக்குறிப்பு வழிப்பட்டது. சலசல, சலசலப்பு, சலவை, சலதாரை, சலவன், சல் பிடித்தல் என்பனவெல்லாம் ஒலிக் குறிப்புத் தோற்ற வழிவந்தவை. சலுப்புத் தண்ணீர் என்பது வ மதுரை வட்டார வழக்கு.
சல்லை:
தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது. முள் மரத்தில் ஏறிப் பறிக்க
ட
யலாது. பிடித்து உலுப்பவும் இயலாது. ஆனால் தொரட்டி கொண்டு வளைக்கவோ, பறிக்கவோ, உலுப்பவோ எளிதாக இயலும். ஆதலால் சல்லை என்னும் வழக்கு உண்டாயிற்று. சல்லிது(சு) என்பது எளிது, குறைந்தது என்னும் பொருளில் வழங்கும் வழக்குச் சொல்லாக இருப்பதால் அறியலாம். சல்லிசாகப் பறிக்கலாம்; சல்லிசாக வாங்கலாம் என்ப வழங்கு மொழிகள்.
சவட்டு மெத்தை:
வ
சவட்டுதல் சவளுமாறு அடித்தல் மிதித்தல் ஆகியவை செய்தலாம். மழை பெருகக் கொட்டலும், போர்க்கள அழி பாடும் சவட்டுதல் எனப்படுவது பழநாள் வழக்கு. பல்கால் பல்லிடங்களில் அடித்துவரும் மண் சவட்டு மண். சவட்டு
மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் ‘கால்மிதி’யின் பெயராக உள்ளது.