பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

சாடை:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

'இவரைப் பார்த்தால் அவர் ‘சாடை’யாக இருக்கிறார் ல்லையா?” என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது. இது நெல்லை, குமரி, முகவை ஆகிய தென்னக வழக்காகும். ‘சாடை’ என்பது வமை உருபொடு ஒட்டக்கூடியது.

சாடையம்:

6

சாடை

ட' என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் ‘சாபை சாடையம்' என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது. ஒருவர் ‘நடையுடை’ ஒப்பக் கொண்டு மேடை யேற்றுவது நாடகம் (கூத்து) ஆகும். திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்' என்பது வழக்காகும். ஒப்ப அமைந்த உடை க்கோலமே கண்டதும் அடையாளம் காண வைக்கும். அரிய சொல்வழக்கு ஈதாம்.

சாணை:

வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண் டை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு. சாலை பன்னசாலை என்பவை இலை தழைகளால் ஆக்கப்படுபவை. சாலை > சாளை > சாணை ஆகிய வடிவம்

இது.

சாய்ப்பாங்கரை, சாய்ப்பு:

சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப் பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய் வைத்தால் தூசி தும்பு விழும். பூச்சி பொட்டு அடையும். நலக்கேடு ஆக்கும். ஆதலால், கலங்கள் கவிழ்த்தி வைக்கப்படுதல் அறிவுசார் நடைமுறை. இது தொல் பழநாள் தொட்ட நடைமுறை என்பது, “என் மண்டை (கலம்) திறக்குநர் யார்" என்னும் புறநானூற்றால் புலப்படும். கலங்கள் சாய்த்து வைக்கப்பட்ட திண்டு (கரை) உடை சமையலறையைச் சாய்ப்பாங்கரை என்பது அருமைமிக்கது. ‘சாய்ப்பு' என்னும் அளவில் கூறுவது திருச்செந்தூர் வட்டார வழக்கு.

சார்த்து:

பனை ஓலை வெண்மைக் குருத்தாக வெளிப்படும். பின்னர்ப் பசுமைக் காட்சி வழங்கும். அதன்பின் மஞ்சள்