பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாழாக்குவது.

வழக்குச் சொல் அகராதி

காதுக்கு வெறுப்பூட்டுவது

பொருள்களில் வழக்கூன்றியுள்ளது.

ஆகாவழி - கூடாவழியில் செல்பவன்

15

என்னும்

ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகி றாய்" என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறி யாமல் ஆகாத வழியில் செல்லும் ஆளைக்குறித்தல் வழக்கில் உள்ளதாம். “அவன் ஆகாவழி" என்றாலே, ஆகாத செயலை செய்தற்கு ஆகாத வழியில் செல்பவன் என்பது பொருளாம். கூடா ஒழுக்கம் என்பது போல ஆகாவழி என்க. ஆகா வழியே ஆக்க வழியாகக் கொண்டவர் பெருகினால் நாட்டு நிலை என்னாம்?

ஆட்டங் கொடுத்தல் - உறுதிப்பாடில்லாமை.

பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு. ஆடுதல், அசைதல் ஆகியவை காற்றால் நிகழ்பவை அவ்வாறு காற்றால் ஆடுதல் இன்றிப் பற்றுக்கோடு உறுதியாக இல்லாமையால் நேர்வதையே

66

ஆட்டங் கொடுத்தல் என்பர். ஆடக் கூடாதது ஆடுவதே ஆட்டங் கொடுத்தல் எனலாம். இவ் வழக்கில் இருந்து, "அவர் பதவி ஆட்டங்கொடுத்து விட்டது து. 'அவர் நிலைமை ஆட்டங் காடுத்துவிட்டது” என்பனபோல வழக்கில் வந்துவிட் குடும்பமே ஆட்டங் கொடுத்து விட்டது' என்பது பேரிழப்பு அல்லது பேரதிர்ச்சியால் நிகழ்வதாம்.

ங்

ஆட்டம் போடல் - தவறான நடக்கை

66

ம்

ஆ ாத ஆட்டம் எல்லாம் ஆடினான்” என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழந்தைகள் ஆடல், கலை யாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வாடல், இதனை விளக்கவே ஆ ஆடாத ஆட்டம்' எனப்பட்டது. பண்புடையவர் ஆடாத ஆட்டம் இவ்வாட்டம். சூதாட்டம், களியாட்டம், பாலாட்டம் முதலாய ஆட்டம் ஆடாத ஆட்டம். நளன்கதை, தருமன் கதை நாடறிந்த கேடாக இருந்தும் அவ்வாட்டத்தை அரசே ஊக்கு கின்றது. இன்றேல் சூதாட்டு களியாட்டு நிகழுமா? பரிசுச் சீட்டு என்பது என்ன? மதுக்கடை அனுமதி என்பது என்ன? பொது மக்களை ஆடாத ஆட்டத்திற்கு ஆளாக்கி விட்டால், அரசின் ஆடாத ஆட்டங்கள் அரங்குக்கு வாராது என்னும் அடிப் படையா? ஆடாத ஆட்டம் அழிவின் தொடக்கம் என்க.

ம்