பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

சின்னம் பேசல்:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது. “சின்னம் பட வருத்தம் செய்தாலும்” சந்தனம் மணம் குன்றாது என்பது இலக்கிய ஆட்சி.

சின்னவீட்டுப் பொழுது:

திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக இருந்து பின் வட்டார வழக்கு ஆகியிருக்க வேண்டும். சின்ன வீடு என்பது பொருள் வெளிப்படை.

சினையிட்டிலி:

கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது. வழக்காகாமல் குறித்த இட

சினைத்தல்:

-

-

ன வழக்காக இருக்கலாம்.

பாது

சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டை யிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. சினை = முட்டை; சினையாகு பெயர், ஆகுபெயர் வகைகளுள் ஒன்று.

சீந்தி:

ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது. சிந்தி >சீந்தி; வழிந்து ஒழுகுவது என்னும் பொருளது.

சீந்துதல்:

66

வாங்குதல், பெறுதல், கேட்டல் என்னும் பொருளமைந்த பெருவழக்குச் சொல். “அவளைச் சீந்துவார் இல்லை" என்பது பெண் கேட்டுவருவார் இல்லை என்னும் பழிப்புச் சொல். காய்கறி சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது என்பது விலைக்கு வாங்குதல் பொருளது, இவை முகவை மாவட்ட வழக்கு.