பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீந்தை:

வட்டார வழக்குச் சொல் அகராதி

305

மூக்குச் சிந்திக் கொண்டிருப்பானை(ளை)ச் சீந்தை என்பது பொருந்துவது. சீந்தை என்பது சிந்தும் சளியைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் உள்ளது. ‘மூக்குச் சீந்தி' என்பது சிலர்க்குப் பட்டப் பெயர். 'அழுபவள்' என்பது பொருள்.

சீமாறு:

கூட்டுமாறு, பெருக்குமாறு என வழங்கப்படும் வாரியல் பெரிய குளம் வட்டாரத்தில் சீமாறு என வழங்கப்படுகின்றது. சீத்தல் என்பது துடைத்தல், நீக்கல் என்னும் பொருளது. சீத்தலுக்கு உரியமாறு சீமாறு ஆயது. ‘கால் சீக்கும்' என்பது இலக்கிய ஆட்சி. துடைப்பக் கட்டை என்பது போலச் சீவக் கட்ை என்பது கொங்கு நாட்டு வழக்கு. சீமாறு எனவும் வழங்கும். சீர் தூக்கி:

தெய்வத் திருவுருவைத் தூக்கிச் செல்பவரைச் ‘சீர் தூக்கி’ என்பது புதுக்கோட்டை வட்டார வழக்கு. சீர் என்பது சீர் பாதம் என்பது போலத் தெய்வம் குறித்து நிற்கிறது. சீர்>Y>ஸ்ரீ. எ-டு: ஸ்ரீ பண்டாரம்.

சீரக்கம்:

மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது. சீராட்டு என்பது போன்றது இது.

சீரை:

சிறப்புத் தரும் உடையைச் சீரை என்றனர். சீரை சுற்றித் திருமகள் பின்செல என்பது கம்பர் வாக்கு. சீரை, சீலை என வழக்கில் ஊன்றி விட்டது. ஆனால் குமரி மாவட்ட வழக்கில் சீரை என்பது அச்சுமாறாமல் அப்படியே வழங்குகின்றது. மக்கள் வழக்கு, மாறா இலக்கிய வழக்காக இருத்தற்குச் சான்று இ ன்னவை.

சீலை:

சீலை என்பது துணிவகையுள் ஒன்றைக் குறிப்பிடும் பொது வழக்கினது எனினும் அது, தரகு என்னும் பொருளில் பொற் கொல்லர் வழக்கில் உள்ளதாம். ஆடுமாடு விற்று வாங்கும் தரகர்கள் கைமேல் துணிபோட்டு மறைத்து விரல் பிடித்துப் பேசும் வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.