306
சீவாந்தி:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
பூவரசம் பூ மஞ்சள் நிறத்தது. மற்றை அரசு பூவாது இது பூத்தலால் பெற்ற பெயர் பூவரசு என்பது. அப் பூ வண்ணமும் அந்தி மாலை வண்ணமும் ஒப்ப இருத்தலைக் கண்டு வழங்கிய சொல் சீவாந்தி. சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது. பொதுமக்கள் போற்றும் புலமைத் தோன்றலாகிய தோற்றம் காட்டுவன இன்னவை. இது குமரி மாவட்ட வழக்கு. செவ்வந்தி என்பதைக் கருதுக.
சீனி:
படகை நிறுத்துவதற்கு நங்கூரம் பாய்ச்சுவர். நங்கூரம் பாய்ச்சிவிட்டால் படகு துறை சேர்ந்ததுமட்டுமன்று. பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப் பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி சீனநாட்டுப் பொருள்.
=
சுட்டி:
சுட்டித் தனம் என்பது சுட்டி எனப்படுதல் பொது வழக்கு. து ஆனால் சுட்டு அடிப்படையில் சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது. அதைச் ‘சுட்டி' இப்படியா பேசுவது? அடிப்பது? “என்பது வழக்கு” தென் வட்டாரங்களிலும் இப் பொருள் வழக்கு உண்டு. சுண்டான்:
சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு. சிறு விரல் சுண்டுவிரல் என்பதும் கருதலாம். சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும். அண்டா, குண்டா 6 என வரும் ஏனவகைகளை எண்ணலாம். பொண்டான் என்பது பேரெலி அல்லது பெருச்சாளி. சுண்டு:
6
சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு. உழவர் வழக்கில் சுண்டு கயிறு உண்டு. சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது. உதட்டுக்கு எப்படி இப்பெயர் வந்தது. “பீடியை