பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

307

ரண்டு சுண்டு சுண்டினால்” என்பது பேச்சு வழக்கு. பீடி குடித்தல் அல்லது பிடித்தலைச் சுண்டு என்பது உண் ஆதலால், அதனைச் சுண்டும் உதடு ‘சுண்டு' எனப்படுதாயிற்று. சுணக்கு:

ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. அதனை நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு. சொணக்கு என்றும், சோணை என்றும் வழங்குவது முகவை வழக்கு. முடங்கி ஒட்டியுள்ள காதைச் சோணை என்பதும், அக் காதுடையவரைச் சோணைக் காதினர் என்று பட்டப் பெயரிட்டு வழங்குவதும் முகவை வழக்கு. ஆதலால் வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது பொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது

எனலாம்.

சிவனி:

செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச் சிவந்த வண்ணம் குறிப்பதே. விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது.

சுரக்கட்டை:

தவளை பல்வேறு நிலைகளில் பல்வேறு ஒலிகளை எழுப்பும்; பல தவளைகள் சேர்ந்தும் ஒலிக்கும். பலர் கூடிப்பாடுதல் தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வடடார வழக்கு. சுரம் = இசை; பாசுரம் = பாடல். சுரயம்:

சுர் என்பது சூடு, சுடர் என்பவற்றின் அடிச்சொல் வெப்பப் பொருள் தருவது. சுரம், காய்ச்சல் எனப்படுதலும், பாலைவனம் எனப்படுதலும் இதனை விளக்கும். சுரம் என்னும் பொது வழக்குச் சொல் நாகர்கோயில் வட்டாரத்தில் ‘சுரயம்’ என் என்று வழங்குகிறது. சுடுதல் பொருளும் தருகிறது.

சுருணை:

சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு. ஓலைச் சுருள் என்பது