பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

பின்னது. இச் சுருள் என்னும் பொதுச்சொல் ‘சுருணை' எனத் தென்னக வட்டார வழக்காக உள்ளது.

சுருத்து:

சுரிதல் என்பது சுழல்தல். சுரிதகம் என்பது கலிப்பா உறுப்புகளின் முடிநிலை. சுரிந்து என்பதும் அது. ஒன்றைச் சுற்றிச் சூழ்ந்து வருதல் அதன்மேல் உள்ள அன்பு அக்கறை ஆயவற்றால் ஏற்படும். சுருத்து என்பது அன்பு என்றும், அக்கறை என்றும் பொருள் கொள்ளும் சொல்லாகத் தென்னகத்து வழக்கில் உள்ளது. அவன் என்மேல் சுருத்தானவன்” என்பர்.

சுருள்:

66

சுருள் என்பது 'கஞ்சா' என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. அதனைச் சுருட்டிப் புகைத்தல் வழியால் சுருட்டு என்னும் பெயர் ஒப்பப் பெயர் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

சுழற்றி:

துளையிடப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். துளைத்துத் தோண்டப்பட்ட கிணறு துரவு ஆகும். தோட்டம் துரவு என்பது இணைச்சொல். சுற்றித் திருகுதலே துரப்பணத்தின் செயற்படுத்தம் ஆதலால், அதனை ஒப்பச் சுழற்றுதல் என்னும் சொல்லால் வழங்குதல் சிவகாசி வட்டாரத்தில் தச்சுத் தொழிலர் வழக்கில் உள்ளது.

சுழலி:

சுழல்வது சுழலி; சுழல வைப்பதும் சுழலி. கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந் நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் ரத்தார் அதனைச் அதனைச் சுழலி என வழங்குவர். ‘ரிவால்வர்' என்பதைச் ‘சுழலி' என்றார் பாவாணர். சுழைதல்:

சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. குழல் என்பது குழையாவது போல் சுழல் என்பது சுழையாயது.