பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருவை:

வட்டார வழக்குச் சொல் அகராதி

311

செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப் பீரி வட்டார வழக்காகும். செருகி வைக்கப்படும் ஓலைக்குச் செருவை என்பதும் பெயர். அப் பெயரை வேலி என்னும் பொருளில் வழங்குவது தூர்த்துக்குடி (மேடாக்கிச் செய்த குடி) வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது.

செலவுப் பெட்டி:

கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு. செலவு என்பது அரை செலவு ஆகும். அரை செலவு என்பது அரை பொருள் செலவு என்பதாம். அம்மியை அரைசிலை என்பார் வீரமா முனிவர் (சதுரகராதி). செலுக்கு:

செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன் இடையெழுத்துகள் விடுப்பட்ட வடிவம் இது. ஓரிடத்துக் கூறப்பட்ட சொல் பல்வேறு இடங்களுக்குச் சென்று வழங்கு வதே செல்வாக்கு. அது தன்பொருள் இழந்து செல்வத் தொடர்பு கொண்டதாயிற்று.

செவியன்:

பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால் அதன் செவி நீளம் தனி அடையாளமாகிவிடும். செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார்.

செழி:

ஆகும்.

செழுமை செழிப்பு, செழிமை, செழி என செழுமையான மண்ணைச் சழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சேற்றுமண் தொழிமண் எனப்படுவது பொது வழக்கு. தொழி உழவு நெல் நடவுக்கு உரியமண். செழிப்பான பயிர், செழிம்பான வாழ்வு என்பனவும் இவ்வழிப்பட்டனவே.