பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

தக்கம்:

தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு, தடுக்கம் என்பவை தடுத்தல், நிறுத்துதல் பொருள் தருவனவாம். தட்டுத் தடங்கல் என்பது இணைச்சொல். இனித் தருக்கம் என்பதும் தடுத்து நிறுத்துதல் பொருளில் தொகுத்துத் தக்கமாகி யிருக்கவும் கூடும்.

தக்கை:

காது

கனமற்ற பழுப்பு என்பது தக்கை என வழங்கும். குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம். புட்டிகளின் மூடி தக்கையாகும். இனி விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது. தேய்வை=தேய்ப்பான்.

தகண்:

முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணை யாக வழங்குதல் தவணை. ஒரு பாறையைப் பெயர்த்தல் வரை வைத்துப் பிளத்தல் தகணையாம். பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை 6 என்பது குமரி முதலிய தென்னக வழக்கு.

தகணை:

ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு. தகணையைப் பத்தி என்பது திருமங்கல வட்டார வழக்கு. ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை எனப்படும் வழக்கத்தை எண்ணலாம். தவணை> தகணை. கரும்புத் துண்டைத் தகணை என்பதும் வழக்கு.