322
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
வெளிப்படுதல் தயவு ஏற்பட நீ கெஞ்சினாலும் நான் உதவ மாட்டேன் என்பது பொருளாம். மசிதல் என்பது குழைவு கொள்ளல் பொருளது. மசித்தல்=கடைதல்.
தரங்கு:
அரங்குதல் = தேய்த்தல், தடவுதல், வருடல், அரங்கு > தரங்கு. தகர ஒற்று மிகல். புல் செதுக்கும் அல்லது களை செதுக்கும் கருவியைக் களைக் கொட்டு, களை சுரண்டி, களை காத்தி, சுரண்டி எனல் பொது வழக்கு. தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி, எளிமையாய் மக்கள் வழக்கில் இடம்பெற்ற சான்றாம். தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது. தரைதல் = ஊன்றுதல்; என்னும் வழியது அது.
தரவு:
-
ம்
ஒருபொருளைப் பெற்றுக் கொண்டு - வரவு வைத்துக் காண்டு அதற்குச் சான்றாகத் தரும் எழுத்தைத் தரவு என்பது மக்கள் வழக்காக இருந்து கல்வெட்டிலும் இடம் காண்டது. கலிப்பாவின் உறுப்புகளுள் முதற்கண் தருவ தாகிய உறுப்பைத் ‘தரவு' என்பதும், குறவஞ்சிப் பாடல்களில் வரும் ‘தரு’ என்பதும் எண்ணத்தக்கன.
தரவை:
தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது. பரவை என்பது கடற் பெயர். பரவை தரவை. வல்லொற்று மாற்றம் இது.
தருவை:
வ
கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன. தருவது பெற்றுத் தருவதாம் நீர்நிலைக்குத் ‘தருவை’ என்னும் பெயரீடு இருப்பது சிறப்புமிக்க ஆட்சியதாம். எ-டு: புத்தன் தருவை.
தலசு:
தலைசு என்பது ஐகாரம் அகரமாதல் முறைப்படி வந்தது. தலைமையானது, தலைமை என்னும் பொருளது அது. பெரிய