பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

17

ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் - முறைகெடச் செலவிடல்

ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட லும், குட்டியைத் தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டு தற்காகச் செய்யும் வேலை இது. இவ்வழக்கில் இருந்து வந்தது இத்தொடர். ஒருவகைக்கென உரிய ஒரு தொகையை வேறொரு வகைக்குச் செலவிடலும்; ே வேறொரு வகைக்கென உரிய ன் னாரு வகைக்குச் சலவிட லும் பிறகு மாற்றிச் சரிக்கட்டலுமாக இருப்பவரை இப்பழமொழியால் குறிப்பர். இன்னது இன்னதற்கென இல்லாமல் எதையும் எதற் கும் செலவிடும் வழக்கம் உள்ளவர்களை இவ்வாறு குறிப்பர். இம்முறை' சமாளித்தல் எனவும் படும்.

தாகையை

ஆடவிடல் - அரங்கேற்றல்

66

ஆட்டத்திற்குப் பயிற்சி தந்து அரங்கேற்றுதல் வழக்கம். அறையில் ஆடி அம்பலத்தில் ஆடல்” என்னும் பழமொழியே தனைத் தெளிவாக்கும். இந்நாளில் ஆடவிடலாம் அரங் கேற்றம் வெள்ளமெனப் பெருக்கெடுக்கின்றன. பாட்டரங்கம் ஆட்டரங்கம், பழமைய. முன்னதற்குச் சங்க நாள் அரங்கேற்றம் சான்று. பின்னதற்குச் சிலப்பதிகார அரங்கேற்று காதை சான்று. இந்நாள் அரங்கேற்றங்கள் அவைக் களந்தோறும் நிகழ்தலை இன்றைய நிகழ்ச்சிப் பகுதி காட்டும். கிழமை இதழ்கள், நாளி தழ்கள் ஆகியவற்றின் கலைப் பகுதி காட்டும்.

ஆடி அடங்கல் - அமைதல்

ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டு பொருள் சுண்டவும் உ லின் உரம் சுண்டவும், குருதி சுண்டவும், நாடி நரம்புகள் சுண்டி இழுக்கவும் பழைய ஆட்டம் போடமுடியாமல் வேறு வழியின்றி அடங்குதல் உண்டு. இதனை ஆடி அடங்கல் என்பர். ஆடி அடங்கிய பின்னராவது தெளிவு ஏற்படுமா? பெரும் பாலோர்க்கு இல்லை. மூதா (கிழப்பசு) இளம் புல்லைத்தின்ன முடியாமல் (பல்போய் விட்டமையால்) நாவால் நக்கி இன்புறல் போல மனம் அசை போட்டுக் கிளு கிளுப்பதை விடுவது இல்லை. ஆடிய ஆட்டத்தின் முதிர்ச்சி எளிதாகப் போகுமா? ஆடிப்போதல் - அஞ்சி நடுங்கல்

அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச் செய்தியைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்பது அப்