திராணி:
வட்டார வழக்குச் சொல் அகராதி
329
திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது. வலிமையற்றவனைத் திராணி கெட்டவன் என்பர். திரன் வலிமை. திரனை உடைமை திரனி> திரானி> திராணி.
திரிமணை:
மணை என்பது அடிக்கட்டை ட, துண்டுப்பலகை எனப் பொருள் தரும் சொல். திரிகை, மரத்தினால் முற்காலத்தில் செய்யப்பட்டு வழக்கில் இருந்தமையால் அதனைத் திரிமணை (திரிகை) என்பது ஒட்டன்சத்திர வழக்கு ஆயிற்று. மணை எ- டு: அரிவான்மணை.
திரிகால்:
6
‘கால்” என்பதற்குச் சக்கரம் என்பது ஒரு பொதுப் பொருள். சக்கரம் சுழல்வது கொண்டு திரிகால் என வழங்குதல் தலக்குள வட்டார வழக்காக உள்ளது. தலைக்குளம் தலக்குளம் எனப்பட்டது.
திருமாளிகை:
அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும். திருமாளிகைத் தேவர் என்னும் இசைப்பா வல்ல சிவனிய அடியார் பெயரால் திருமாளிகை சிவனியச் சார்புடைமையும் புலப்படும். திரு = தெய்வத் தன்மை. திருவலகு:
திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை. அலகிடுதல் பெருக்குதல். அலகு பெருக்குமாறு.
திருக்கோயில் வழக்கில் இருந்த இது பார்ப்பனருள் மாலிய வழிபாட்டார் (ஐயங்கார்) வீட்டு வழக்காகக் கொண்டுள்ளனர். திருவாதல்:
பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. திரு' என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் பேராசிரியர் (தொல்காப்பியம்) உரையைக் கருதலாம். அதன் பொருள் அழகு. இனிச் செல்வம் என்பதும் அது. அதனைப் பெறாளை இருசி என்பது பொது வழக்கு.