பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

_

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

சொற்கள். ஒருவரை ஏதேனும் ஒரு வகையால் வராமலோ செல்லாமலோ தடுத்து நிறுத்துதலைத் தேக்குதல் என்பது பெட்டைவாய்த்தலை வட்டார வழக்காகும்.

தேசிக்காய்:

தேசி என்பது தேசத்தான் தேசத்தது என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தமையால் வேறு தேசத்தில் இருந்து வந்தது என்னும் பொருளில் தேசி எனப்பட்டது. தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும். அயல் தேசத்தான் பரதேசி எனப்படுதலும், மண்ணெண்ணெய் சீமை எண்ணெய் எனப்படுதலும் கருதத்தக்கவை.

தேரி:

6

காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். கடற்கரை சார்ந்த கள்ளி, தாழை என்பவற்றை யன்றித் தென்னை, பனை மரங்களின் உச்சியைத் தொடவும் ஏன் மறைக்கவும் கூட தேரிகள் உண்டு. தேர்போன்று உயர்ந்து தோன்றும் மணற் குவியலைத் தேரி என்பது அரிய உவமை ஆட்சியாம். தேரிப் பெயரால் ஊர்ப் பெயர்களும் நெல்லைப் பகுதியில் உண்டு.

தை:

தைத்தல் ஊன்றுதல் பொருளது. துணி, தோல் முதலிய வற்றில் ஊசியை ஊன்றித் துளைத்தல் தைத்தல், தையல் எனப்படும். அதுபோல் நிலத்தில் ஊன்றி நடுவதாம் நாற்று ஊன்றுதல் பொருளில் 'தை’ என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. தைப்பாறுதல்:

இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், ‘களை ஆறுதல்’ என்று வழங்குதல் தஞ்சை வழக்கு. தைப்பாறுதல் நெல்லை, முகவை வழக்கு. தகைப்பு நீர்வேட்கை. தகைப்பு நீக்குதல் (தாகம் நீக்குதல்) தெம்பாக்கிவிடும்.

தொக்கு: (1)

ஒன்றோடு ஒன்று இணைவது இணைவது தொடக்கு, தொடுக்கு ஆகும். இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும்