பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

இளங்குமரனார் தமிழ்வளம் 1

படுக்கை பரப்பிவைத்தல் பொருளது. அகன்ற இலைகளில் பரப்பி வைப்பது. ஆனால் குருதிப்பலி என்பதோ கொட்டிப் போவது. ஆதலால் படுக்கை அஃதில்லாத படையல் பொருள் கொண்டது.

படுகை:

நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகை யாகும். படிப்படியாகப் படிவதே படிகை. படுகை என மக்கள் வழக்கில் ஆயது. படுக்கை, படுத்தல் என்பவையும் படிதல் வழிப்பட்ட சொற்களே. தெற்குப் படுகை, வடக்குப் படுகை என நிலப்பகுதிகள் குறிக்கப்படல் உண்டு. மணற்கல் படுகைகள் நெல்லைக் கடற்பகுதிகளில் உண்டு.

படுசாவு:

படுகிடை என்பது நெடுங்காலம் படுத்துக் கிடக்க வைக்கும் நோய் ஆகும். அவ்வாறு சாவும் சாவு திடுமென்று குத்து, வெட்டு, நேர்ச்சி, வீழ்ச்சி, சுருக்கிடல் என்பவை இல்லாமல், இயல்பாகச் வ சாவும் சாவாம். ஆதலால், சீர்காழி வட்டாரச் சொல்லாகப் படுசாவு என்பது இயல்பாக இறக்கும் இறப்பைக் குறித்து வழங்குகின்றது.

படுப்பனை:

படுக்கும் இட ம் என்னும் பொருளில் திட்டுவிளை வட்டாரத்தில் படுப்பனை என்னும் சொல் வழங்குகின்றது. கொள்வது கொள்வனை எனவும், கொடுப்பது கொடுப்பனை எனவும் வழங்குவது போலப் படுப்பது படுப்பனை ஆகியதாக இருக்கும்.

படைக்கால்:

ச்

உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால் அடிப்பது (ஆழமாக உழுவது) உண்டு. அது படைச் சால் எனப்படும். அப் படைச் சால் ஒன்றன் இருபக்கங்களிலும் வரப்பு அமைத்து நீரோடும் வாய்க்கால் ஆக்குவது வழக்கம். அவ் வாய்க்கால் சாலுக்கு இருப்பக்கமும் உள்ள சால்களை வரப்புகள் ஆக்கிப் பாத்திகட்டி நீர்விடுவர். அந் நீரோடும் படை வாய்க்காலை படைக்கால் என்பது திருமங்கல வட்டார வழக்கு.

பண்டடை:

பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும்.