360
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
அதனைப் பதப்பு என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அப் பள்ளத்தில் கை வைத்தால் நாடி துடிப்பதை நன்றாக அறியலாம். பதைப்பு>பதப்பு; நாடித்துடிப்பு. மற்றொன்று: அவ்விடம் வப்பம் மிகாமல் இருக்கக் குழந்தைப் பருவத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தல் வழக்கம். பதப்பு என்பது குளிர்ச்சி
என்னும் பொருளதாம்.
பதவல்:
பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர் கோத்து நிற்பதாம். அது எடையாலும் அளவாலும் அளவில் மிகுதியாக இருக்கும். பச்சை மிளகாய்க்கும் வற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் போது புலப்படும். பதத்தது மிகுதியாதல் கொண்டு பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. இது நெல்லை வழக்கு. மக்கட் பெருக்கமும் பதவல் எனப்படும். பதனங்காய்;
வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல் நலத்திற்கு ஊறு செய்யாது அதனை அறிந்து பயன் கொள்ளும் வகையில் பதனங்காய் என்னும் என்னும் பெயர் சென்னை வட்டார வழக்காக உள்ளது.
பதனம்:
L
பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப் பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாகவை, பதனமாக எடு என்பது முகவை, நெல்லை வழக்குகள். பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகின்றது. பந்தற் பருக்கை:
பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில் இல்லாமல் இறப்பு வீட்டுக்கு அடையாளம் காட்டவும் அமரவும் தக்கதாக வாழை நட்டாமல், மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்புக்குப் பந்தல் என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. அப் பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை அரிசிச் சோறு. பப்பப்பா:
அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை