பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

361

பொது வழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து அகரம் பகரமாகிப் பப்பப்பா ஆகிவிட்டது. அப்பப்பா’ என்பது பொது வழக்கு. இது சிதைவு.

பயிராதல்:

விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொது வழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென்னகப் பொது வழக்கு. பழைய இலக்கியங்களில் துணையை விரும்பி அழைத்தல் பயிர்தல் எனப்படுதலை அறிந்தால் அதன் நடைச் சொல் இது என உணரலாம்.

பரக்களி: :

கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொது வழக்குச் சொற்கள். உரிமை விடுத்து அயலாரால் மகிழல் ‘பரக்களி’ ஆயிற்று.

பரம்பு:

அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் ‘பரம்புச் சட்டம்' உண்டு. இங்கே பரம்பு என்னும் சொல் பாய் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பாய் என்பதும் பரம்புதல் பொருளதே யாகும்.

பராளம்:

பராளம் என்பது பரபரப்பு படப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர்+ஆளம்=பராளம். பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு கட்டுக்குள் நில்லாமல் அகலப்படுதல் வழி ஏற்பட்ட சொல்லாகும். ஏராளம், தாராளம் என்பவை போல் ளம் சொல்லீறு. ஆளப்படுதல் ஆளம்.

பரி:

பரி என்பது

பரி என்பது

இறைவைச் சால் சதுரமானது. இறைவைக்கூனை எனப்படும் வட்டவடிவினது. வட்டம் என்னும் பொருளில் வரும் முதனிலை. பரிவட்டம், பரிவேடம் என்பவை அறிக. பரி என்பது இறைவைக் கூனைப் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது.