பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

இடிபடுதல் - வசைக்கு ஆட்படுதல்

L

21

ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத் திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும் அவர்க்கு ல்லை. அதனால் கண்ட படி வசை மொழிதல் கண்கூடு. “அவரிடம் அதைச் சொல்லிவிட்டு நம்மால் இடிபட முடியாது அவரிடம் அதைச் செய்தால் அவ்வளவுதான் ; நம்மால் இடிபட்டு முடியாது” என்பர். இடிபடுதல் என்பது கம்பியால் குத்துதல் போலவும், உலக்கையால் இடித்தல் போல வும் செய்வதாம். இடி என்பது இடித்துக் கூறும் வசை! இடித்துக் கூறும் அறிஞர் உரைபோல்வதன்று. இது உணர்ச்சி வயப் பட்டவர் வசைமொழி.

இடிவிழுதல் - கொடுந்துயர்ச் செய்தி கேட்டல்

முகில் மோதுங்கால் மின் வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது, இடி தாக்காமல் இருப்பதற்காக டிதாங்கி அமைப்பதும் காணத்தக்கதே. இங்கே இடிவிழுதல் என்பது, அவ்விடியால் அடையும் துன்பம் போன்ற துன்பம் அடைவதே கூறப்படுகிறது.

குடும்பத்தின் பாதுகாப்பாம் தந்தையோ, தாயோ திடு மென இயற்கை எய்திவிட்டால், குடும்பம் இடிவிழுந்ததுபோல் மீளாத்துயருக்கு ஆளாகும். அதனை “இந்த இடியைத் தாங்க முடியுமா?" "பேரிடி இதற்குமேல் என்ன இருக்கிறது” எனக் டும்ப நிலை அறிந்தோர் வருந்திக் கூறும் உரையால் இடி விழுதல் என்பதன் பொருள் புலப்படும்.

இடுதேள் இடுதல் - பொய்க்குற்றம் கூறல், பொய்யச்சமூட்டல்.

தேள் நச்சுயிரி : அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண் டாகும் அச்சம் அது. கடிபட்டோர், வாய்நுரை தள்ளி இறப்பின் எல்லைக்குப் போய்விடுவாரும் உளர். அத்தேள் அச் சத்தினைப் பயன்படுத்தி, ஏதோ ஓர், லை, சருகு தாள் எடுத்துத் ‘தேள்தேள்' என இடுவது போல அச்ச மூட்டுதல் ‘இடுதேள் இடுதல்' என்பதாம். இடுதேள் இடும் வழக்குப் பழமையானது என்பது சிலப்பதிகாரத்தின் வழியே அறியக் கிடக்கிறது. டு தேளிட்டு என்றன் மேல்” பொய்ப்பழி சூட்டினர் எனக் கண்ணகி வாக்காக இட டம் பெறுகின்றது. நடுங்க வைக்க நாயென்றும்

66