368
பிசின்:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
பழநாளில் பயின் என வழங்கப்பட்ட அரிய சொல் பிசின் என வழுவாக வழங்குகின்றது. பயின் என்பது பெருங்கதை ஆட்சி. பிசின், கோந்து என்றும் பசை என்றும் வழங்கப் படுதலும் உண்டு. நெல்லையார் ‘அல்வா' என்னும் இனிப்புப் பண்டத்தைப் பிசின் என வழங்குவது உவமை வழிப்பட்டதாம்.
பிசினி:
L
பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித் தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. 'பிசினாரி' என்பதும் அது. கருமித் தனம் என்னும் பொருளது. கொண்டதை விடாமல் (பிறர்க்குக் கொடாமல்) வைத்துக் கொள்ளும் குணத்தால் பெற்ற பெயர் இது.
பிட்டு:
L
வி’
பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. பிட்டு என்பது பொது வழக்கு. பிட்டு என்பதற்கு 'இ என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். வேகும் வகை கருதிய பெயரீடாக இருக்கக் கூடும்.
பிடித்துக் கொடுத்தல்:
திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும். தாதா என்பது மணக்கொடை புரிதலால் பெற்ற பெயர். பெண்ணைக் கொடுத்தல் கொள்ளல் என்பவை தொல்பழ வழக்கு. அவ் வழக்கை வெளிப்படுத்தும் ஆட்சி பிடித்துக் கொடுத்தல் ஆகும். து பழனி வட்டார வழக்கு.
பிணம்:
தீ
தீ நாற்றம் தருவதைப் பிணவாடை என்பது பொது வழக்கு. பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும்.வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும். பிணம் எனப் பூண்டு பெயர் பெற்று, அது விளையும் இடம் குறிப்பது. வியப்பான வழக்கம் இது.
பிப்பு:
பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக் கடியைக் கொசு பிச்சுப்