பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

369

பிடுங்குகிறது என்பது பொது வழக்கு. பிய்ப்பு ‘பிப்பு' ஆயது. பிக்கல் (பிய்க்கல்) பிடுங்கல் இல்லை என்பது இணைமொழி.

பிரி கழறுதல்:

தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு. மூளைக் கோளாறு, கிறுக்கு என்பது பொருளாம். பிரி என்பது கிறுக்கு என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பிரி என்பதன் மூலப் பொருள் (கழறுதல்) அளவில் அமைந்த ஆட்சி அது. பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. பில்லணை:

ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள் ஒன்று. வில்லை>பில்லை. பில்லை>பில். மேலே வட்ட அமைப்பு உடை மையால் கொண்ட பெயர்.

பிறப்பு:

ஆனால்

இது பிறப்பினைக் கூறுவது பொது வழக்கு. உடன் பிறந்தவர்களை உடன் பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள். உசிலம்பட்டி வட்டாரத்திலோ இது பெரு வழக்கு.

பிறை:

L பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப் படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று. சுவரில் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்குப் பிறையைப் பிறை என்பது நெல்லை வழக்கு. மாடக்குழி என்பது பொது வழக்கு. பீச்சுதல்:

மழை

பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள். வை வ பொது வழக்கானவை. வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும். குறிப்பாகக் குமரி மாவட்டப் பெருவழக்காகும்.

பீலி: (1)

பீலி=மயில் தோகை; மயில் தோகைபோல் அமைந்த காலணிகலம் பீலி எனப்படுகின்றது. கட்டுகம் பீலி மிஞ்சி