பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

1

பேயென்றும் ஒன்றரைக் கண்ணன் என்றும் கூறும் வழக்குப் போல, இடுதேள் இடுதல் செய்வகை அச்சுறுத்தலாக உள்ளதாம். இயற்கை எய்துதல் - இறத்தல்

இயற்கை ஐவகை மூலப் பொருள்களையுடையது. அவை வெளி, வளி, தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது உலகம். அவ்வைம் பூதங்களாலும் அமைந்தவையே உலகப் பொருள்கள். அவற்றுள் ஒன்றாகிய மூச்சுக் காற்று வெளிக் காற்றொடு சேரவும். உடல் தீயுண்டோ, மண்ணுள் புதையுண்டோ மண்ணோடு மண்ணாகி விடவும் நேரும் நிலை, இயற்கையோடு இயற்கை ஒன்றிவிடுவதாக இருத்தலால் இயற்கை எய்துதல் என்பது வழக்கமாயிற்று. இயற்கை எய்துதல் என்பது இறத்தல் என்பதாம். இலக்கணர் இறத்தல் என்னாமல் இவ்வாறு கூறுதலை மங்கல வழக்கு என்பர். 'இறத்தல்' என்பதும் கூட மங்கல வழக்காம். இறத்தல், கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவை அறிக. இராமம் போடல் - ஏமாற்றுதல்.

ராமன் தெய்வப் பிறப்பு என்றும், திருமால் தோற்றரவு (அவதாரம்) என்றும் கூறப்படுபவன். அவனை வழிபடும் அடி யார்கள் அவன் திருப்பெயர் நினைந்தும் சொல்லிக் கொண்டும் போடும் திருமண்காப்பு ‘இராமம்' என வழக்கில் ஊன்றியது. இராமனுக்கு அடையாளம் இராமம் என்க.

,,

இராமம் ‘நாமம்' எனப் பிழையாக வழங்கவும் ஆயிற்று. இராமம் போடுவதை நாமம் போடுதல் என்றும், நாமம் சாத்து தல் என்றும் சொல்லப்படுவதாயிற்று. ‘பட்டை நாமம், எனவும் அடையாளம் காட்டப்பட்டது. தனக்கு இராமம் சாத்துதல் வழிபாட்டு அடையாளம், ஆனால் அடுத்தவர்க்கு இராமம் சாத்துதல் என்பது ஏமாற்றுதல் ஆயிற்று. "எனக்கு நாமம் போட்டுவிட்டான் என்று ஏமாந்தவன் ஏமாற்றியவனைச் சொல்வது வழக்கம். 'நான் விழிப்பான ஆள்' என்றவன் அறியாமல் உறங்கும்போதில் போடப்பட்ட நாமத்தால் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இருதலைமணியன் - ஒரு நிலைப் படாதவர்

இருதலை மணியன் என்னும் பெயரே ஒருவகைப் பாம்பின் தன்மையைத் தெளிவாக்கும் இருபக்கமும் தலைபோல் தோற்றம் அமைந்தது அப்பாம்பு, அன்றியும் இப்பாலும் அப்பாலும் செல்வதும் உண்டு என்பதுவழக்கு. அதன்வழி எழுந்தது இது.